அடேங்கப்பா.. அச்சு அசல் ஐபோன் 17 மாதிரியே இருக்கே! விவோவின் புது மாடல்.. விலையை கேட்டா ஆடுவீங்க!

Published : Dec 13, 2025, 08:22 PM IST

Vivo X200T ஐபோன் 17 போன்ற வடிவமைப்பில் விவோ X200T விரைவில் இந்தியா வருகிறது. விலை ரூ.40,000. 6000mAh பேட்டரி மற்றும் பல சிறப்பம்சங்கள் உள்ளே.

PREV
16
Vivo X200T ஐபோன் 17 போல ஒரு போன் வேண்டுமா? பட்ஜெட் விலையில் களமிறங்கும் விவோவின் 'X200T' - முழு விவரம்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ (Vivo) நிறுவனம் தனது அடுத்த அதிரடி வரவுக்குத் தயாராகிவிட்டது. குறிப்பாக, ஆப்பிள் ஐபோன் 17-ஐ (iPhone 17) நினைவூட்டும் வகையிலான வடிவமைப்பில், ஒரு புதிய மிட்-பட்ஜெட் ஸ்மார்ட்போனை விவோ அறிமுகப்படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விவோ எக்ஸ்200 (Vivo X200) சீரிஸின் கீழ் வரவுள்ள இந்த புதிய போன், சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் கேமரா அம்சங்களுடன் நடுத்தர விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

26
பெயர் மற்றும் அறிமுகத் தேதி

இந்த புதிய மாடலுக்கு 'விவோ எக்ஸ்200டி' (Vivo X200T) என்று பெயரிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்பிரிக்ஸ் (Smartprix) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்தத் தொடரில் X200 மற்றும் X200 FE மாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

36
விலை என்னவாக இருக்கும்?

விவோ நிறுவனம் சமீபத்தில்தான் தனது ஃபிளாக்ஷிப் மாடலான எக்ஸ்300 (X300) சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், பட்ஜெட் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து வரவுள்ள இந்த விவோ X200T மாடலின் விலை சுமார் ரூ.40,000 இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் மற்ற இரண்டு மாடல்களும் ரூ.50,000 விலை வரம்பில் இருப்பதால், இது சற்று மலிவான விலையில் பிரீமியம் அனுபவத்தைத் தரும் என நம்பப்படுகிறது.

46
வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்

இந்த போனின் மிக முக்கிய சிறப்பம்சமே அதன் டிசைன் தான். இது ஐபோன் 17-ன் தோற்றத்தை ஒத்திருக்கும் என்று கிசுகிசுக்கப்படுகிறது. அம்சங்களைப் பொறுத்தவரை, இதில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கக்கூடிய 6000mAh மெகா பேட்டரி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இது விவோ எக்ஸ்200 எஃப்இ (FE) மாடலைப் போலவே இருக்கும் என்றும் தெரிகிறது.

56
முன்னோடி மாடலான X200 FE-ன் சிறப்பம்சங்கள்

புதிய போன் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க, ஏற்கனவே உள்ள விவோ எக்ஸ்200 எஃப்இ (Vivo X200 FE) மாடலின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்:

• டிஸ்பிளே: 6.31-இன்ச் AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்.

• பிராசஸர்: சக்திவாய்ந்த MediaTek Dimensity 9300+.

• கேமரா: 50MP மெயின் கேமரா, 50MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50MP செல்ஃபி கேமரா.

• பேட்டரி: 6500mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.

• பாதுகாப்பு: IP68 மற்றும் IP69 தரச்சான்று.

66
புதிய எக்ஸ்200டி

புதிய எக்ஸ்200டி மாடலும் ஏறக்குறைய இதே போன்ற அல்லது இதைவிடச் சற்று குறைவான அம்சங்களுடன், ஆனால் கவர்ச்சிகரமான விலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories