ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ரெட்மி நோட் 15 5ஜி, ரெட்மி பேட் 2 ஜனவரியில் அறிமுகம்.. விலை எவ்ளோ?

Published : Dec 19, 2025, 11:32 AM IST

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ரெட்மி நோட் பேட் 2 டேப்லெட்டை ஜனவரி 2026-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. 108MP கேமராவுடன் வரும் இந்த போனுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
14
ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன்

சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம் ரெட்மி, இந்திய சந்தையில் தயாராகும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. “108 மாஸ்டர் பிக்சல்” என்ற டேக்லைனுடன், ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனும், ரெட்மி நோட் பேட் 2 டேப்லெட்டும், 2026 ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை, டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் நிறுவனத்தின் பிரதிநிதி சித்தார்த் மதன் உறுதிப்படுத்தினார். இதற்கு முன்னோட்டமாக, ரெட்மி தனது அதிகாரப்பூர்வ X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில், ரெட்மி நோட் 15 5ஜி-யின் முதல் தோற்ற டீசரை வெளியிட்டுள்ளது. போனின் மெல்லிய வடிவமைப்பு மற்றும் பிரீமியம் லுக், ஸ்மார்ட்போன் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

24
108 மெகாபிக்சல் கேமரா போன்

இந்த மாடல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் 108 மெகாபிக்சல் கேமரா ஆகும். தற்போது அதிக பிக்சல் கேமரா டிரெண்டாகி வரும் நிலையில், ரெட்மி இந்த மாடல் மூலம் அதை மேலும் வலுப்படுத்துகிறது. இதன் விலை ரூ.20,000க்கு அருகில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 4K வீடியோ பதிவு ஆதரவு, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் இதில் வழங்கப்படும்.

34
வரவிருக்கும் ரெட்மி போன்

மேலும், இந்த போன் 6.77 இன்ச் வளைந்த டிஸ்ப்ளே, 1080x2392 ரெசல்யூஷன், 5520 எம்ஏஇச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி66 பாதுகாப்பு மதிப்பீடு, புளூடூத் 5.3 ஆகிய அம்சங்களுடன் வருகிறது. 178 கிராம் எடை மற்றும் 7.35 மிமீ தடிமன் கொண்ட இந்த போன், நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும். 5 ஆண்டு வாரண்டியுடன், அறிமுகத்திற்குப் பிறகு அமேசானில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
ரெட்மி நோட் பேட் 2

இதனுடன் அறிமுகமாகும் ரெட்மி நோட் பேட் 2, ஸ்மார்ட் பென் ஆதரவுடன் வரும் டேப்லெட்டாகும். இதில் 2.5K டிஸ்ப்ளே, டால்பி விஷன், ஆண்ட்ராய்டு 16 அப்டேட், 9000 எம்ஏஇ பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஸ்னாப்டிராகன் 7 (4வது தலைமுறை) செயலி இடம்பெறும். 16 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 2 டிபி வரை விரிவாக்க வசதியுடன், குறைந்த விலையில் சக்திவாய்ந்த டேப்லெட் தேடும் பயனர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என ரெட்மி தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories