ஒன்பிளஸ் நிறுவனம், புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் Pad Go 2 டேப்லெட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை பிரீமியம் அனுபவத்தை மிட்-ரேஞ்ச் விலையில் வழங்குகிறது. இதன் விலை, சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் Pad Go 2 டேப்லெட் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. அதிக விலை கொண்ட ஃபிளாக்ஷிப் மாடல்கள் வேண்டாம், அதே நேரத்தில் பிரீமியம் அனுபவம் வேண்டும் என்று நினைக்கும் பயனர்களை குறிவைத்து இந்த இரண்டு சாதனங்களும் வெளியிடப்பட்டுள்ளன. மிட்-ரேஞ்ச் பிரிவில் வலுவான போட்டியை உருவாக்கும் வகையில் இந்த லாஞ்ச் அமைந்துள்ளது என்றே கூறலாம்.
25
ஒன்பிளஸ் 15R
விலை விவரங்களைப் பார்க்கும்போது, ஒன்பிளஸ் 15R இந்தியாவில் ரூ.47,999 முதல் விற்பனைக்கு வருகிறது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியண்ட் இந்த விலையில் கிடைக்கிறது. 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட உயர்ந்த வேரியண்ட் ரூ.52,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 22 முதல் விற்பனைக்கு வரும். அதேபோல், ஒன்பிளஸ் Pad Go 2 டேப்லெட் ரூ.26,999 விலையில் அறிமுகமாகியுள்ளது.
35
ஒன்பிளஸ் 15R அம்சங்கள்
256GB மாடல் ரூ.29,999 ஆகவும், 5G ஆதரவு கொண்ட மாடல் ரூ.32,999 ஆகவும் கிடைக்கிறது. டேப்லெட் டிசம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் AMOLED 1.5K டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 165Hz ரிஃப்ரெஷ் ரேட் ஆதரவு இந்த திரை, ஸ்மூத் ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவத்தை தரும். மேலும் IP66, IP68, IP69, IP69K போன்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்க்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒன்பிளஸ் 15R-க்கு புதிய Snapdragon 8 Gen 5 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது OxygenOS 16 (Android 16 அடிப்படையில்) உடன் வருகிறது. 4 ஆண்டுகள் OS அப்டேட் மற்றும் 5 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என ஒன்பிளஸ் உறுதி அளித்துள்ளது. 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன. 7,400mAh பெரிய பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் முக்கிய அம்சம்.
55
ஒன்பிளஸ் Pad Go 2 டேப்லெட்
ஒன்பிளஸ் Pad Go 2 டேப்லெட்டில் 12.1 இன்ச் பெரிய டிஸ்ப்ளே, Dolby Vision மற்றும் 900 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது. MediaTek Dimensity 7300 Ultra சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 10,050mAh பேட்டரி, 33W சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் ஸ்டைலோ ஆதரவு ஆகியவுடன், ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் 5G டேப்லெட்டாக Pad Go 2 அறிமுகமாகியுள்ளது.