அதிக நேர பேட்டரி சார்ஜுடன் குறைந்த விலையில் டேப்லெட் Realme Pad 2 Lite!

Published : Sep 12, 2024, 10:19 AM ISTUpdated : Sep 12, 2024, 08:54 PM IST

ரியல்மீ (Realme) நிறுவனம் இந்திய சந்தையில் மற்றொரு புதிய சாதனத்தின் அறிமுகத்திற்குத் தயாராகி வருகிறது. Realme Pad 2 Lite என்ற புதிய பட்ஜெட் டேப்லெட் வரவிருக்கிறது. செப்டம்பர் 13ஆம் தேதி நடக்கும் ஆன்லைன் நிகழ்வில் இந்த டேப்லெட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஃபிளிப்கார்ட் வழியாக இந்த டேப்லெட் விற்பனைக்கு வரவுள்ளது.

PREV
15
அதிக நேர பேட்டரி சார்ஜுடன் குறைந்த விலையில் டேப்லெட் Realme Pad 2 Lite!
Realme Pad 2 Lite

ரியல்மீ (Realme) நிறுவனம் இந்திய சந்தையில் மற்றொரு புதிய சாதனத்தின் அறிமுகத்திற்குத் தயாராகி வருகிறது. Realme Pad 2 Lite என்ற புதிய பட்ஜெட் டேப்லெட் வரவிருக்கிறது. செப்டம்பர் 13ஆம் தேதி நடக்கும் ஆன்லைன் நிகழ்வில் இந்த டேப்லெட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஃபிளிப்கார்ட் வழியாக இந்த டேப்லெட் விற்பனைக்கு வரவுள்ளது.

25
Realme Pad 2 Lite

Realme Pad 2 ஆனது 1920 x 1200 பிக்சல்கள் ரிசொல்யூஷன் மற்றும் 450 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் 90Hz 2K டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இந்த டேப்லெட் கண்ணுக்கு இதமான காட்சி அனுபவத்தை உறுதிசெய்கிறது. இந்த டேப்லெட் பெரிய 8,360mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

35
Realme Pad 2 Lite

டேப்லெட் 8 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி வரை நீட்டிக்க்கூடிய டைனமிக் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியுடன் இருக்கும் என்பதை ரியல்மீ உறுதிப்படுத்தியுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 இல் இயங்கும். டேப்லெட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்புடன் MediaTek Helio G99 சிப்செட்டைக் கொண்டிருக்கும்.

45
Realme Pad 2 Lite

வடிவமைப்பைப் பொறுத்தவரை, Realme Pad 2 Lite பின்புறத்தில் டூயல்-டோன் ஃபினிஷ் மற்றும் ரவுண்ட் கேமரா மாட்யூலுடன் இருக்கும். அதே நேரத்தில் முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் பிளாட் டிஸ்ப்ளே உள்ளது.

55
Realme pad 2 lite

Realme Pad 2 Lite மெகா பேட்டரிக்கு ஏற்ப 15W வேகமான சார்ஜிங் வசதியுடன் கிடைக்கும். 8MP பின்புற கேமரா மற்றும் 5MP செல்ஃபி ஷூட்டருடன் இருக்கும். இந்த பட்ஜெட் டேப்லெட்டைப் பற்றி இப்போது கிடைத்துள்ள தகவல்கள் அதிகாரபூர்வமானவை இல்லை. கூடுதல் தகவல்களை Realme செப்டம்பர் 13ஆம் தேதி அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

click me!

Recommended Stories