இரவில் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துபவரா? உங்களுக்குத் தான் இந்த எச்சரிக்கை!

First Published | Sep 11, 2024, 12:25 PM IST

மொபைல் போன்களின் அதிகப்படியான பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். இந்த விஷயத்தில் முன்கூட்டியே கவனம் செலுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் மிகத் தீவிரமான பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
 

Mobile addiction news

இந்த டிஜிட்டல் யுகத்தில் மொபைல் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. எலக்ட்ரானிக் சாதனங்கள் பல வேலைகளை எளிதாக்கி இருந்தாலும், அவை தீங்கு விளைவிக்கும் அபாயதமும் உள்ளது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை பொழுதுபோக்கிற்காக மொபைலை பயன்படுத்துவது அதிகமாகியுள்ளது. பலர் மொபைல் போன்களுக்கு அடிமையாகி உள்ளனர்.

Using mobile before sleep

ஆனால் மொபைல் போன்களின் அதிகப்படியான பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். இந்த விஷயத்தில் முன்கூட்டியே கவனம் செலுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் மிகத் தீவிரமான பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

Latest Videos


Radiation alert for Mobile addicts

மொபைல் ஃபோனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பயனாளர்களின் ஆரோக்கியத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். இந்த கதிர்வீச்சினால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படலாம். மொபைல் போன்களை அதிகமாகப் பயன்படுத்துவது வலிப்பு நோய் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.

kids mobile use

இது குறித்து விளக்கியிருக்கும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் அலோக் குல்ஸ்ரேஸ்தா, "இந்தியாவில் 1000 பேரில் 6 பேருக்கு இந்த நோய் உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். அதிகப்படியான மொபைல் போன் பயன்பாடு வலிப்பு அபாயத்தை அதிகரிக்கிறது" என்கிறார்.

Children Mobile addiction

"மொபைல் போன் திரையை நீண்ட நேரம் பாரப்பதால் உறக்கமின்மையால் பலர் அவதிப்படுகிறார்கள். தூக்கமின்மையால் சிரமப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகும் அடிக்கடி வலிப்பு ஏற்படுவதாக பல நோயாளிகள் வருகின்றனர்" என்றும் டாக்டர் அலோக் எச்சரிக்கிறார்.

Mobile addiction

இந்த வலிப்பு நோய்க்கு குறைந்தது 3 ஆண்டுகள் தொடர்ந்து மருந்து எடுத்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நோய் குணமாகும் வாய்புப உள்ளது. வலிப்பு நோய்க்கு முக்கிய காரணம் மன அழுத்தம்தான். பெரும்பாலும் 12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.

Mobile addiction effects

பொதுவாக வலிப்பு நோய்க்கான மருந்தை குறைந்தது 3 வருடங்கள் சாப்பிட வேண்டும். இது தவிர, நோயாளிக்கு வலிப்பு அதிகமாக இருந்தால், சிகிச்சையை 5-6 ஆண்டுகள் தொடரலாம். வலிப்பு நோயைத் தடுக்க தடுப்பூசிகள் மற்றும் ஸ்ப்ரேகளும் உள்ளன. மற்ற நோய்களைப் போலவே, இந்த நோய்க்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை இடைவிடாமல் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் மருந்துக்குப் பலன் கிடைக்கும்.

click me!