Mobile addiction
இன்று அனைவரும் ஸ்மார்ட்போன் உலகில் மூழ்கி உள்ளனர். உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை மொபைல் மூலம் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்டால், அதன் மயக்கத்திலேயே மணிக்கணக்காக நேரம் வீணாகும். நாளடைவில் பல நோய்களுக்கும் வழிவகுக்கிறது.
क्या आपके बच्चे को भी है मोबाइल की लत, छुड़ाने के लिए अपनाएं ये टिप्स
குறிப்பாக, இன்றைய காலத்தில் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி வருகின்றனர். உண்மையில், குழந்தைகள் இப்படி இருப்பதற்கு பெற்றோர் ஒரு முக்கியக் காரணம். குழந்தைகளை இந்தப் பழக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு.
உங்கள் பிள்ளைகள் சிறப்பாகச் செயல்பட வேண்டுமெனில் நீங்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக மாற வேண்டும். குழந்தைகள் முன் போன் பார்ப்பதை குறைக்க வேண்டும். நீங்களே செல்போனில் அதிக நேரம் செலவழித்துவிட்டு, குழந்தைகளிடம் போனை பார்க்க வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் கேட்க மாட்டார்கள். அவர்களை மாற்றுவதற்கு முன், பெற்றோரே செல்போன் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.
மொபைல் போன்களை தேவையான போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். 24 மணிநேரமும் செல்போனை பார்த்துக்கொண்டே இருக்கக் கூடாது. நண்பர்களுடன் வெளியே செல்வது, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது, புத்தகங்கள் படிப்பது, பாடல்கள் கேட்பது, வீட்டில் உள்ளவர்களுடன் உரையாடுவது போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
குழந்தைகள் இந்த ஆபத்தான பழக்கத்திலிருந்து விடுபட, அவர்கள் மொபைல் போன்களைப் பார்க்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 1 மணிநேரம் மட்டுமே போனை பார்க்கலாம் என்று கட்டுப்படுத்துங்கள். சாப்பிடும் போதும், தூங்கும் முன்பும் போன் பார்க்க கூடாது என்பதை விதியாகப் பின்பற்றச் செய்யுங்கள்.
செல்போனுக்கு அடிமையாவதால் ஏற்படும் ஆபத்துகளை பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்றும் அவர்களுக்குச் சொல்லுங்கள்.
பெற்றோர் இருவரும் வேலை செய்கிறார்கள் என்றால், அவர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குழந்தைகளுடன் சிறிது நேரம் பேசுவது. சாப்பிடும்போதும், செல்போனை பயன்படுத்தாமல் இருப்பது போன்றவற்றை ஒரு விதியாக வைத்துகொள்ளலாம்.
குழந்தைகளின் செல்போன் பார்ப்பதைக் குறைக்க விளையாட்டு, புதிர்கள் போன்ற பொழுதுபோக்குகளில் அவர்களை ஈடுபடச் செய்யுங்கள். அவர்களிடம் இயல்பாக உள்ள திறமையைக் கண்டறிந்து, அதனை வளர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள். இது போன்ற செயல்பாடுகள் போனுக்கு அடிமையாவதில் இருந்து விடுவிக்கும்.
அவ்வப்போது விடுமுறை நாளில் குழந்தைகளை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று புதிய அனுபவங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் அவர்கள் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிசெய்ய முடியும்.