போன் ரொம்ப ஹீட் ஆகுதா? உடனே இந்த ஐடியாவை ட்ரை பண்ணிப் பாருங்க டியூட்!

First Published | Sep 5, 2024, 1:46 PM IST

மொபைல் போன் ரொம்ப ஹீட் ஆகுதா? இந்தப் பிரச்சினையை பெரும்பாலான மக்கள் சந்தித்து இருப்பார்கள். இதற்கு தீர்வு காண சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி மொபைல் அதிகமாக சூடாவதைத் தவிர்க்கலாம்.

Avoid direct sunlight

நீண்ட நேரம் உங்கள் மொபைலை சூரிய ஒளியில் வைத்திருக்கக் கூடாது. சூரியனின் வெப்பம் உங்கள் மொபைல் போனில் வெப்பத்தைத் தக்கவைப்பதுடன், மேலும் வெப்பமடையச் செய்யும்.

Close unused apps

பயன்படுத்தப்படாத செயலிகளை க்ளோஸ் செய்ய வேண்டும். சில செயலிகள் பயன்படுத்தாத நேரத்திலும் பின்னணியில் இயங்கும். அவற்றைத் க்ளோஸ் செய்துவிட வேண்டும்.

Tap to resize

Flight mode

ஃப்லைட் மோட் (Flight mode) ஐ ஆன் செய்யலாம். இதுவும் மொபைலை வேகமாக குளிர்விக்க உதவும். இந்த வசதி வயர்லெஸ் தகவல்தொடர்புகளை நிறுத்துகிறது. இதன் மூலம் பேட்டரியை பயன்பாட்டைக் குறைத்து மொபைலை சூடாவதையும் குறைக்கலாம்.

Reduce the Brightness

திரையில் பிரைட்னஸ் அளவை குறைவாக வைத்து பயன்படுத்தவும். அதிக பிரகாசமான திரையை பயன்படுத்துவது சார்ஜை அதிகமாக உறிஞ்சி பேட்டரியை சூடாகச் செய்யும்.

Use genuine charger

மொபைல் உற்பத்தியாளரால் அங்கீகரிக்கப்பட்ட தரமான சார்ஜரை மட்டும் பயன்படுத்தவும். சேதமடைந்த சார்ஜர்கள், டூப்ளிகேட் சார்ஜர்களை பயன்படுத்துவது செல்போனில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும்.

Update apps

நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களுக்கு அவ்வப்போது கிடைக்கும் அப்டேட்களை உடனுக்குடன் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும். போனின் அவை செயல்திறனை மேம்படுத்துகின்றன. ஃபோன் பயன்படுத்தும் ஆற்றலையும் குறைக்கின்றன.

Remove the case

ஃபோனின் கவரை அகற்றுவதும் ஹீட்டிங் பிரச்சினையைச் சமாளிக்க உதவும். ஸ்மார்ட்போனை சிறிது நேரம் கவர் இல்லாமல் வைத்திருந்தாலே அதன் வெப்பம் குறைந்துவிடும்.

Charge your phone correctly

ஃபோனை சார்ஜ் செய்யும்போது பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். சார்ஜ்  ஆகும்போது பேட்டரி ஓரளவு சூடாகும். அப்போது ஃபோனை பயன்படுத்துவதால் அது மேலும் சூடாகிறது.

Latest Videos

click me!