ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்களை எளிதாக மாற்றுவது எப்படி?

First Published | Sep 2, 2024, 7:15 PM IST

ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு மாறுவதற்கு சில படிநிலைகள் உள்ளன. குறிப்பாக வாட்ஸ்அப்பை மாற்ற அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் வாட்ஸ்அப் டேட்டாவை இழக்காமல் ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டு மொபைலுக்கு மாறலாம்.

whatsapp updates

Tap to resize

ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு மாறும்போது, வாட்ஸ்அப் அக்கவுண்ட் தகவல்கள், புரொஃபைல் போட்டோ, தனிப்பட்ட உரையாடல்கள், குழு உரையாடல்கள், கம்யூனிட்டி, சேனல் அப்டேட்டுகள், உரையாடல் வரலாறு, கோப்புகள், செட்டிங்ஸ் ஆகியவற்றை மாற்றலாம்.

வாட்ஸ்அப் சேனல்கள் மூலம் பெறப்பட்ட அழைப்புகளின் வரலாறு, டிஸ்பிளே பெயர், ஸ்டேட்டஸ் அப்பேட், வாட்ஸ்அப் சேனல் மூலம் வந்த கோப்புகள் ஆகியவற்றை மாற்ற முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

WhatsApp Custom Sticker Feature

ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு மாறுவதற்கு முன், உங்களிடம் சமீபத்திய Samsung Smart Switch ஆப், கூகுள் பிக்ஸல் அல்லது Android 12 அல்லது அதற்குப் பிறகு வந்த ஆண்ட்ராய்டு OS கொண்ட மொபைல் இருக்க வேண்டும். இரண்டு மொபைல்களையும் இணைக்கும் USB-C கேபிள் அல்லது அதேபோன்ற வேறு ஒன்று கேபிள் வேண்டும். இரண்டு மொபைலிலும் ஒரே தொலைபேசி எண்ணையே பயன்படுத்த வேண்டும். ஆண்ட்ராய்டு மொபைலில் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்டு வெர்ஷன் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

How to do it?From now on to link WhatsApp Web or Desktop to your account, you will be asked to use your face or fingerprint as proof id to unlock on your phone, and then you have to scan the QR-code from the phone to link your device.

ஐபோனில் உள்ள ஆப் ஸ்டோரில் இருந்து வாட்ஸ்அப்பின் லேட்டஸ்டு வெர்ஷனை நிறுவிக்கொள்ளுங்கள். புதிய ஆண்ட்ராய்டு மொபைலில் ஆரம்ப செட்அப் செய்யும்போது தரவை மீட்பதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின் USB-C கேபிள் மூலம் இரண்டு மொபைல்களையும் இணைக்கவும். அடுத்து, திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றி ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு தரவுகளை பரிமாற்றம் செய்யவும்.

இந்தச் செயல்முறையின்போது ஐபோன் எப்போதும் unlock செய்யப்பட்டே இருக்க வேண்டும். தரவுப் பரிமாற்றம் முடிந்ததும், கேபிளை அகற்றிவிடலாம். பின், ஆண்ட்ராய்டு மொபைலில் வாட்ஸ்அப்பைத் திறந்து பழைய மொபைலில் பயன்படுத்தப்பட்ட அதே மொபைல் எண்ணை பயன்படுத்தி login செய்யவும். அப்போது, Start ஆப்ஷஐ கிளிக் செய்து பழைய உரையாடல்களை இறக்குமதி (import) செய்துகொள்ளலாம்.

Latest Videos

click me!