தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் அண்மையில் விலையை உயர்த்தியது. இதனால் ஏராளமான பயனர்கள் MNP மூலம் BSNL நெட்வொர்க்கிற்கு மாறினர்.
இருக்கும் பயனர்களை தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல், மற்றும் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளையும், மலிவுவிலை திட்டங்களையும் அறிவித்து வருகின்றன.
அதன்படி, ஏர்டெல் நிறுவனம் சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்…
ஏர்டெல் ரூ.155 பிளான்!
ஏர்டெல் நிறுவனம் ரூ.155க்கு ஒரு ரீசார்ஜ் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதன் மூலம் 28 நாட்கள் வேலிடிட்டி, மற்றும் வரம்பற்ற அழைப்புகள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது.
Long Validity Plan
நீண்டகாலம் வேலிடிட்டி கொண்ட திட்டத்தையும் ஏர்டெல் அறிவித்துள்ளது. அதன்படி. நீங்கள் ரூ.999 ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். இதை செய்யும் போது அடுத்த 180 நாட்களுக்கு அதாவது 6 மாதங்களுக்கு நீங்கள் ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. இந்த லாங் வேலிடிட்டி திட்டத்திலும் வரம்பற்ற அழைப்புள், எஸ்எம்எஸ் டேட்டா வசதி, அன்லிமிட்டெட் டேட்டாபேக்ஸ் ஆகியவைகளை பெறலாம். மேலும் தகவல்களுக்கு நீங்கள் ஏர்டெல் தேங்கஸ் ஆப்ஸ்-ல் சென்று பார்வையிடலாம்.
ஏர்டெல்லுக்கு போட்டியாக வந்த ஜியோ!
ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து, ஜியோவும் சில பல மலிவுவிலைத் திட்டத்தை அறிவித்துள்ளன. மேலும் ஜியோ போன் பிரைமா பயனர்களுக்காக பிரத்தியேக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.
ஜியோ பயனர்கள், இப்போது ரூ.223க்கு ரீச்சார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு இலவச வரம்பற்ற அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தம் 56ஜிபி டேட்டா பெறலாம். ரூ.250க்கு ரீச்சார்ஜ் செய்கையில் 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா பெறலாம். இந்த இரண்டு ரீச்சார்ஜ் திட்டங்களுக்கும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் உண்டு.
இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் ஜியோ சினிமாவுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் OTT ஸ்ட்ரீமிங் கட்டணங்களை சேமிக்க முடியும். ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான இலவச உறுப்பினராக டிவி மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.
ரூ.223 திட்டம் ஜியோ போன் ப்ரைமா பயனர்களுக்கு பிரத்தியேகமாக கிடைக்கிறது. இது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் மற்ற திட்டங்கள்!
1. தொடக்க திட்டங்கள்
149 ரூபாயிலிருந்து தொடங்கும் பிளான்கள், குறைந்த காலம் மற்றும் டேட்டாவிற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
1.5 ஜிபி/நாள் அல்லது 2 ஜிபி/நாள் வரை data தளங்கள்.
2. மிதமான Data திட்டங்கள்
399 ரூபாய் முதல் 599 ரூபாய் வரை உள்ள திட்டங்கள்.
தினசரி 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி Data பயன்பாடு.
இலவச அழைப்புகள், 100 எஸ்எம்எஸ்/நாள்.
3. அதிக அளவிலான டேட்டா திட்டங்கள்
999 ரூபாய் முதல் தொடங்கும் பிளான்கள்.
தினசரி 3 ஜிபி மற்றும் அதற்கு மேல் டேட்டா பயன்பாடு.
அதிகளவு இன்டர்நெட் பயன்பாட்டிற்காக சிறந்த திட்டங்கள்.
4. வருடாந்திர திட்டங்கள்
2,879 ரூபாய் அல்லது அதற்கு மேல்.
தினசரி 2 ஜிபி அல்லது 3 ஜிபி வரை டேட்டா பயன்பாடு.
365 நாட்கள் சேவைகளுடன், நீண்ட காலம் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு.
5. அன்லிமிடெட் திட்டங்கள்
2399 ரூபாய் திட்டம்.
தினசரி 2 ஜிபி அளவுக்கு மேலான இன்டெர்நெட் கனெக்டிவிட்டி.
வரம்பற்றி இலவச அழைப்புகள், அதிகபட்ச சலுகைகள்.
ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு விலைவாசியில் சிறந்த அனுபவங்களை வழங்க, நவீன டிஜிட்டல் சேவைகள், கூடுதல் டேட்டா, மற்றும் விறுவிறுப்பான சலுகைகளை தன்னுடைய ரீச்சார்ஜ் திட்டங்களில் அடிக்கடி புதுப்பித்துக்கொண்டு வருகிறது.