வரிசை கட்டி களமிறங்கும் புதிய ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்! ட்ரெண்ட் செட் பண்ணப் போறது எது?

First Published | Sep 9, 2024, 1:25 PM IST

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரிலீஸ் ஆகின்றன. தொடர்ந்து ஒன்பிளஸ் 13 உள்பட இன்னும் 5 பிராண்டுகளின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் 2024ஆம் ஆண்டில் வெளியாக உள்ளன.

Apple Event

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரிலீஸ் ஆகின்றன. புதிய தொழில்நுட்ப அட்பேட்டுகளுடன் வெளியாகும் இந்த மொபைல் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒன்பிளஸ் 13 சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் 5 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.

iPhone 16 series

ஐபோன் 16, ஐபோன் 16, பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்களைக் கொண்ட புதிய ஐபோன் சீரிஸ் செப்டம்பர் 9ஆம் தேதி, இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு iPhone 16 ஸ்மார்ட்போன் புதிய AI அம்சங்களுடன் வெளியாகிறது. திறன்மிக்க சிப்செட், மேம்பட்ட கேமரா ஆகியவற்றுடன் பிரீமியம் ஸ்மார்போனாக இது இருக்கும்.

Tap to resize

OnePlus 13

கடந்த வருடம் வெளியான ஒன்பிளஸ் 12 மிகவும் பிரபலமடைந்தது. இப்போது ஒன்பிளஸ் நிறுவனம் புதிய OnePlus 13 ஸ்மார்ட்போனை நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 4 சிப்செட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6000mAh பேட்டரி மேம்பட்ட செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையைப் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

Techno Phantom V Fold 2

டெக்னோ நிறுவனத்தின் Phantom V Fold 2 மற்றும் V Flip 2 இரண்டும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மாட்போன்கள். முதல் முறையாக டெக்னோ இந்த வகை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் MediaTek Dimensity 9000+ மற்றும் MediaTek Dimensity 8020 SoC பிராசஸர்களைப் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vivo X200 series

வீவோ X200 சீரஸில் Vivo X200, Vivo X200 Plus மற்றும் Vivo X200 Pro ஆகிய மூன்று மாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, Vivo X200 Pro 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. ஆனால் விவோ இன்னும் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், Vivo X200 சீரிஸ் இன்னும் சில மாதங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Oppo Find X8 series

ஓப்போ ஃபைன்டு எக்ஸ் 8 சீரிஸ் வரும் அக்டோபரில் Oppo Find X8, Oppo Find X8 Pro மற்றும் Find X8 Ultra என மூன்று மாடல்களுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்ட்ரா வேரியண்டில் மீடியாடெக் டைமென்சிட்டி 9400 சிப்செட் இடம்பெறும் என்றும் கேமராவில் இரண்டு பெரிஸ்கோப் லென்ஸ்கள் இருக்கும் என்றும் தகவல் பரவியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்1.5K+ அளவுக்கு தெளிவான காட்சிகளைக் வழங்கும் என்று சொல்லப்படுகிறது.

Latest Videos

click me!