ஆப்பிளுக்கு ஆப்பு வைக்கும் ஒன்பிளஸ்! ஐபோன் 16 க்கு சவால் விடும் Oneplus 13 ஸ்மார்ட்போன்!

First Published | Sep 7, 2024, 12:35 PM IST

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் புதிய OnePlus மொபைல் விரைவில் வெளியாக உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த போன் குறித்த செய்திகள் வைரலாக பரவி வருகிறது. இந்த போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன? எப்போது விற்பனைக்கு வருகிறது? என முழு விவரங்களையும் தெரிந்துகொள்வோம்.

Oneplus 13

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் அக்டோபர் மாதத்தில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு இந்தியாவிலும் உலகளவிலும் விற்பனைக்கு வரும்.

Oneplus 13

இந்த மொபைல் ரீலிஸ் தேதி குறித்து ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த போனின் அம்சங்கள் குறித்து சில தகவல்கள் வைரலாகி வருகின்றன. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் Snapdragon 8 Gen 4 சிப்செட் உடன் வெளியாகும் என்று தெரிகிறது.

Latest Videos


Oneplus 13

OnePlus 13 ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டதாக இருக்கும். 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் 6000 mAh திறன் கொண்ட பேட்டரியும் இந்த போனில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Oneplus 13

பெரிய பேட்டரி பேக் கொண்ட இந்த போன் 100 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேமரா அமைப்பு சதுர வடிவில் இருக்கும். அதில் 50MP முதன்மை கேமராவும் 6x ஆப்டிகல் ஜூம் வசதியும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Oneplus 13

ஒன்பிளஸ் 13 மொபைல் IP68 மதிப்பீட்டுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்மார்ட்போனாக இருக்கும். பாதுகாப்பிற்காக அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார் இடம்பெற்றிருக்கும். 16GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டிருக்கும்.

click me!