மொபைல் ஸ்லோவா இருக்கா? இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க... புது ஃபோன் மாதிரி மாத்தலாம்!

Published : Sep 02, 2024, 04:57 PM ISTUpdated : Sep 02, 2024, 05:03 PM IST

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஸ்லோவாக வேலை செய்வதை சரிசெய்து செயல்திறனை மேம்படுத்த சில வழிகளைப் பார்க்கலாம்.

PREV
17
மொபைல் ஸ்லோவா இருக்கா? இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க... புது ஃபோன் மாதிரி மாத்தலாம்!
Slow smartphone tips

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும் மொபைல் இயங்குதளமாகும். ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்கள்  காலப்போக்கில் வேகம் குறையலாம். மொபைல் ஆப்ஸ் மெமரியை அதிகமாக எடுத்துக்கொள்வதால் மெதுவாக இயங்குவது, ஹேங் ஆவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதனைச் சரிசெய்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் செயல்திறனை மேம்படுத்த சில வழிகளைப் பார்க்கலாம்.

27
Restart

உங்கள் ஃபோனைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், பின்னணி செயல்பாடுகள் அதிகரிக்கும். இதனால் மெதுவாக செயல்படலாம். மொபைலை ரீஸ்டார்ட் (Restart) செய்வதன் மூலம் ரேம் கிளியர் செய்யப்படும்.

37
Apps and Widgets

நிறைய புதிய செயலிகளை நிறுவுவது மொபைலின் மெதுவான செயல்பாட்டிற்குக் காரணமாக இருக்கலாம். சில விட்ஜெட்டுகள் மூலமும் ஃபோன் ஸ்லோ ஆகலாம். ஹோம் ஸ்கிரீனில் அடிக்கடி அப்டேட் ஆகும் விட்ஜெட்கள் இருந்தால், அவற்றை அகற்றவும்.

47
Animation

அனிமேஷனைக் குறைப்பது அல்லது நீக்கவது மொபைலை மிகவும் இயல்பாக செயல்பட வைக்கும். இதைச் செய்ய, செட்டிங்ஸ் பகுதியில் உள்ள டெவலப்பர் ஆப்ஷன்களை பயன்படுத்தவும்.

57
Storage

அப்ளிகேஷன்கள் மற்றும் தற்காலிக கோப்புகளுக்கு போதுமான இடம் தேவைப்படுவதால், அதற்கு உரிய மெமரி இல்லை என்றாலும் மொபைல் மந்தமாக செயல்படும். தேவையற்ற கோப்புகளைக் கண்டறிந்து நீக்கலாம். மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மெமரியை அதிகரிக்கலாம்.

67
App updates

அப்ளிகேஷன்களின் புதிய அப்டேட்களை புறக்கணிப்பதும் ஸ்மார்ட்போனின் செயல்திறனைக் குறைக்கும். அப்டேட்கள் பெரும்பாலும் செயலிகளில் உள்ள பிழைகளைத் திருத்துபவையாக இருக்கும். மொபைலின் பாதுகாப்பு மற்றும் வேகத்தை அதிகரிக்கும் அப்டேட்டுகளும் கிடைக்கும். எனவே ஆப் அப்டேட்களை தவறாமல் இன்ஸ்டால் செய்யவும்.

77
Android Tips

இந்த டிப்ஸை முயற்சி செய்து ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனின் வேகத்தையும், செயல்திறனையும் கணிசமாக மேம்படுத்தலாம். ஆண்டிராய்டு மொபைல் பயனர்கள் இவற்றை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

click me!

Recommended Stories