ஆளுக்கு ஒரு ஐபோன் வாங்கலாம்! அமேசானில் தரை ரேட்டில் கிடைக்கும் ஐபோன் 15 ப்ரோ!!

First Published | Sep 2, 2024, 3:43 PM IST

ஆப்பிள் நிறுவனம் இன்னும் சில தினங்களில் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ள நிலையில், ஐபோன் 15 ப்ரோ ப்ரீமியம் ஸ்மார்ட்போனின் விலை பாதிக்கும் கீழ் சரிந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் முன்கூடியே அறிவித்தபடி வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளது. வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது.

உயர் செயல்திறன் ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களை வாங்குவதற்கான சிறந்த நேரம் இதுதான். ஐபோன் 15 ப்ரோ இன்னும் சந்தையில் கிடைக்கும் டாப் பிரீமியம் ஸ்மார்ட்போனாக உள்ளது.

Tap to resize

இப்போது அமேசானில் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த விலையில் கிடைக்கிறது. சிறப்புத் தள்ளுபடிகள், எக்ஸ்சேஜ் சலுகை, வங்கிச் சலுகை ஆகியவை மூலம் நம்பமுடியாத அளவுக்குக் குறைவான விலையில் வாங்கலாம்.

ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மொபைலின் கருப்பு நிற 128 GB வேரியண்ட் முன் எப்போதும் காணாத விலையில் விற்பனைக்கு உள்ளது. இந்தச் சுலுகைகளைப் பயன்படுத்தி ஐபோன் 15 ப்ரோவை பாதிக்கும் குறைவான விலையில் வாங்கலாம்.

Apple iPhone 15 Pro (128 GB, Black Titanium) தற்போது ரூ.1,34,900 விலையைக் கொண்டது. அமேசானில் 5% தள்ளுபடியுடன், ரூ.1,28,200 விலையில் உள்ளது. கூடுதலாக, நல்ல நிலையில் உங்கள் பழைய ஐபோனை எக்ஸ்சேஜ் செய்வதன் மூலம் ரூ.58,700 வரை சேமிக்கலாம்.

எக்ஸ்சேஜ் மூலம் ஐபோன் விலையை ரூ.69,500 ஆகக் குறைக்கலாம். மேலும், Amazon Pay ICICI (ஐசிஐசிஐ) வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், ரூ.6,410 வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இதனால் இறுதியில் செலுத்தவேண்டிய விலை வெறும் 63,090 ரூபாயாகக் குறைந்துவிடும்.

Latest Videos

click me!