ஒரு பட்டன் கூட கிடையாது... கேமரா கூட கண்ணுக்குத் தெரியாது... ஹைப் கிளப்பும் சியோமி வாங்ஷு!

First Published | Sep 7, 2024, 11:42 AM IST

ஒரு பட்டன் கூட இல்லாத உலகின் முதல் ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சியோமி வாங்ஷு (Xiaomi Wangshu) MIX சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் ஒரு பகுதியாக இருக்கும்.

Buttonless Smartphone

ஒரு பட்டன் கூட இல்லாத உலகின் முதல் ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மொபைல் பிரியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 1.5 ஆண்டுகளுக்கு முன்பு 'Zhuque' என்ற குறியீட்டுப் பெயருடன் சியோமி ஸ்மார்ட்போன் பட்டன் இல்லாத வடிவமைப்புடன் தயாராகி வருகிறது என்று தகவல் வெளியானது.

Buttonless Mobile

'வாங்ஷு' (Wangshu) என்று பெயரிடப்பட்ட பட்டன் இல்லாத மொபைலை அறிமுகப்படுத்தும் திட்டத்தை சியோமி நிறுவனம் கைவிட்டிருந்தது. ஆனால் இப்போது மீண்டும் அந்த பட்டன் இல்லாத ஸ்மார்ட்போனை வெளியிடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த மொபைலின் தோற்றத்தைக் காட்டுப் படங்களும் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளன.

Tap to resize

Xiaomi Buttonless phone

வெளியாகியுள்ள படங்களில் இருந்து சியோமி வாங்ஷு (Xiaomi Wangshu) MIX சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரிகிறது. பட்டன் இல்லாத ஒரே ஸ்மார்ட்ஃபோன் என்பதால், மொபைலில் எந்த இடத்திலும் பட்டனைக் காணவில்லை.

Xiaomi Wangshu Smartphone

சீனாவைச் சேர்ந்த CoolAPK இந்தப் படங்களை கசியவிட்டுள்ளது. சியோமி வாங்ஷு மொபைலின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் MIX லோகோ இருக்கிறது. படங்களைப் பகிர்ந்த ஒரு பயனர் இந்த மொபைல் 2K 120Hz LTPO டிஸ்ப்ளே மற்றும் 4500mAh பேட்டரி கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதன் பேட்டரி 200W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Xiaomi Wangshu Photos Leaked

வாங்ஷு குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. டிஸ்பிளேவுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும் 'அண்டர் டிஸ்பிளே கேமரா' கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

Xiaomi Wangshu Release Date

சியோமியின் இந்த முதல் பட்டன்-லெஸ் ஸ்மார்ட்போனை 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இது முற்றிலும் மாறுபட்ட மாடலாக இருந்தாலும் இதேபோன்ற முயற்சியில் வேறு எந்த நிறுவனமும் இறங்கியிருப்பதாகத் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Latest Videos

click me!