ரியல்மி, ஒன்பிளஸ் போன்களை அப்போவே வாங்கிருக்கலாம்.. விலை இன்னும் ஏறும்! முழு லிஸ்ட் இதோ!

Published : May 19, 2026, 04:48 PM IST

Mobile Price Hike : ரியல்மி, ஒன்பிளஸ், போக்கோ மற்றும் லாவா நிறுவனங்கள் தங்களது முக்கிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளன. மெமரி சிப் தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

PREV
14
ஸ்மார்ட்போன் விலை உயர்வு

இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. “இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்து வாங்கலாம்” என்று யோசித்த பலருக்கு, மொபைல் நிறுவனங்கள் திடீர் விலை உயர்வை அறிவித்துள்ளன. குறிப்பாக ரியல்மி, ஒன்பிளஸ், போக்கோ மற்றும் லாவா போன்ற பிரபல பிராண்டுகள் தங்களது முக்கிய மாடல்களின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன.

இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள மெமரி சிப் தட்டுப்பாடு. DRAM மற்றும் NAND போன்ற முக்கிய சேமிப்பு சிப்களின் விலை உயர்ந்திருப்பதால், ஸ்மார்ட்போன் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் நேரடியாக இந்திய சந்தையில் தெரிந்துள்ளது. குறிப்பாக மிட்-ரேஞ்ச் பிரிவில் உள்ள போன்களின் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

24
மொபைல்களின் புதிய விலை

ரியல்மி 16 Series தற்போது அதிகம் பேசப்படும் பட்டியலில் உள்ளது. ரியல்மி 16 Pro+ 5G மாடலின் சில வேரியண்ட்களின் விலை ரூ.7,000 வரை உயர்ந்துள்ளது. மேலும் ஒன்பிளஸ் 15R மாடலின் விலையும் அதிகரித்துள்ளது. போக்கோ X8 Pro Max மற்றும் லாவா Agni 4 போன்கள் புதிய விலையுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

34
எலக்ட்ரானிக் பாகங்களின் விலை அதிகரிப்பு

சந்தை நிபுணர்கள் கூறுவதன்படி, இது தற்காலிக உயர்வு மட்டும் இருக்காது. உலகளவில் எலக்ட்ரானிக் பாகங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அடுத்த சில மாதங்களிலும் ஸ்மார்ட்போன் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக 5G போன்கள் மற்றும் அதிக ரேம், ஸ்டோரேஜ் கொண்ட மாடல்களில் இந்த தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

44
மெமரி சிப் தட்டுப்பாடு

இதனால், புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டு இருப்பவர்கள் தற்போது உள்ள சலுகைகள் மற்றும் பழைய விலைகளில் ஸ்டாக்குகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். “இப்போ வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா?” என்ற குழப்பம் வாடிக்கையாளர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories