WhatsApp Support Ends : பாதுகாப்பு காரணங்களால் பழைய ஆண்ட்ராய்டு போன்களுக்கு வாட்சப் ஆதரவை நிறுத்த முடிவு செய்துள்ளது. புதிய பியூச்சர் வழங்குவதில் சிக்கல் இருப்பதால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பழைய ஆண்ட்ராய்டு முக்கிய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு வாட்சப் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 பதிப்பு கொண்ட மொபைல்களில் வரும் செப்டம்பர் 8 முதல் வாட்சப் சேவை முழுமையாக நிறுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பல லட்சம் பயனர்கள் பாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
25
எந்த போன்களுக்கு பாதிப்பு?
வாட்சப் இனிமேல் ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்பு கொண்ட போன்களில் மட்டுமே செயல்படும் என்பதை தெளிவுபடுத்துகிறது. பழைய மென்பொருள் கொண்ட சாதனங்களில் புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்கள் வழங்குவது கடினமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 5.0, ஆண்ட்ராய்டு 5.1 பயன்படுத்தும் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
35
வாட்சப் கொடுத்த முக்கிய அறிவுரை
வாட்சப் ஏற்கனவே சில பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அரட்டை வரலாறு, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் முக்கிய தகவல்கள் அல்லது வேறு கிளவுட் சேவைகளில் காப்புப்பிரதி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வாட்சப் பிசினஸ் அக்கவுண்ட் பயன்படுத்துபவர்களும் உடனே பேக்அப் எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் முதலில் தங்களது ஆண்ட்ராய்டு பதிப்பு என்ன என்பதை அமைப்புகள்-ல் சென்று சரிபார்க்க வேண்டும். பழைய பதிப்பு இருந்தால் சாப்ட்வேர் அப்டேட் கிடைக்கிறதா என்பதை பார்க்கலாம். புதுப்பிப்பு கிடைக்கவில்லை என்றால் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவது அல்லது புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு கொண்ட சாதனம் மாறுவது நல்லது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
55
ஐபோன் பயனர்களுக்கு பாதிப்பு இல்லையா?
இந்த புதிய மாற்றம் தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வாட்சப் தெளிவுபடுத்தியுள்ளது. iOS 15.1 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்பு ஐபோன் பயனர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. பாதுகாப்பு மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாட்சப் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.