இன்றைய சூழலில் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு ஸ்மார்ட்போன் தான் மிக முக்கிய வழிகாட்டி. கூகுள் மேப்ஸ், ஆன்லைன் பேமெண்ட், கேப் (Cab) புக் செய்வது, அவசர எண்களைத் தொடர்புகொள்வது என அனைத்திற்கும் மொபைல் போன் தேவைப்படுகிறது. பயணத்தின் போது போனின் சார்ஜ் தீர்ந்துவிட்டால் ஒட்டுமொத்தத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிடும். எனவே, நல்ல தரமான பவர் பேங்க் வைத்திருப்பது அவசியம். டார்ச் லைட் (வசதி கொண்ட பவர் பேங்க்குகளைத் தேர்வு செய்வது, இரவு நேரப் பயணங்களின் போதும், மின்சாரம் இல்லாத சூழலிலும் கூடுதல் பாதுகாப்பைத் தரும்.
அணியக்கூடிய பாதுகாப்பு சாதனங்கள் (Wearable Safety Devices)
ஸ்மார்ட் பேண்ட்கள் (Smart Bands), மோதிரங்கள் அல்லது கழுத்தில் அணியும் டாலர்கள் போன்ற வடிவிலான கேட்ஜெட்டுகள் தற்போது பிரபலமாகி வருகின்றன. அவசர காலத்தில் பைக்குள் இருக்கும் மொபைலைத் தேடி எடுப்பது கடினம். ஆனால், கைகளிலோ அல்லது கழுத்திலோ இருக்கும் இந்தச் சாதனங்களில் உள்ள SOS பட்டனைத் தட்டுவதன் மூலம், நொடிப் பொழுதில் உங்களது இருப்பிடத் தகவல் உங்களது நெருங்கியவர்களுக்குச் சென்றுவிடும்.
கேட்ஜெட்டுகள் நமக்கு உதவிகரமாக இருந்தாலும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள 'Emergency SOS' அம்சத்தை எப்போதும் ஆன் செய்து வையுங்கள். இரவு நேரங்களில் பயணிக்கும் போது உங்களது Live Location-ஐ நம்பிக்கையான நபர்களுக்குப் பகிருங்கள். பாதுகாப்பு கேட்ஜெட்டுகளை சூட்கேஸின் அடியில் வைக்காமல், ஆபத்து நேரத்தில் சட்டென்று எடுக்கும் தூரத்தில் (கைப்பை அல்லது பாக்கெட்டுகளில்) வையுங்கள்.