வேற லெவல் பேட்டரி பேக்கப்! மலிவு விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் ரியல்மியின் புதிய போன்!

Published : Mar 07, 2026, 08:00 AM IST

Realme C83 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே என அட்டகாசமான அம்சங்களுடன் ரியல்மி C83 5G இந்தியாவில் அறிமுகம். இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை இங்கே அறியவும்.

PREV
14
Realme C83 இந்தியாவை கலக்க வந்த ரியல்மி C83 5G!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து ரியல்மி நிறுவனம் தனது புதிய 'Realme C83 5G' மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மியின் பிரபல 'C' சீரிஸ் வரிசையில் இணைந்துள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன், நீடித்த பேட்டரி மற்றும் சிறப்பான தினசரி பயன்பாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பட்ஜெட் விலையில் 5G சப்போர்ட், மிகப்பெரிய 7000mAh பேட்டரி, மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே என பல அட்டகாசமான அம்சங்களை இந்த போன் தன்னுள் அடக்கியுள்ளது. கேமிங் மற்றும் தொடர்ச்சியான வீடியோ பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த பட்ஜெட் போனை தேடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

24
மிரட்டலான பேட்டரி மற்றும் பவர்ஃபுல் செயல்திறன்

இந்த போனின் மிகப்பெரிய சிறப்பம்சமே இதிலுள்ள 7000mAh அளவிலான 'டைட்டன் பேட்டரி' (Titan Battery) தான். இந்த செக்மெண்டில் வழங்கப்படும் மிகப்பெரிய பேட்டரி இதுவாகும் என ரியல்மி பெருமையுடன் கூறுகிறது. நீண்ட நேரம் சோஷியல் மீடியா, ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பேட்டரி சிறப்பான பேக்கப்பை வழங்கும். மேலும், இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.

செயல்திறனைப் பொறுத்தவரை, இதில் 6nm ஃபேப்ரிகேஷனில் உருவாக்கப்பட்ட MediaTek Dimensity 6300 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது 6GB வரையிலான ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் உள்ள டைனமிக் ரேம் வசதி மூலம் 18GB வரை விர்ச்சுவல் ரேம்-ஐ அதிகரித்துக் கொள்ள முடியும். அதோடு, 2TB வரை மெமரி கார்டு பயன்படுத்திக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

34
பிரம்மாண்ட டிஸ்பிளே மற்றும் கூலிங் தொழில்நுட்பம்

ரியல்மி C83 5G போனில் 6.7 இன்ச் அளவிலான LCD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் போன்களில் பொதுவாக 90Hz அல்லது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமே வழங்கப்படும் நிலையில், இந்த போனில் 144Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் (Adaptive Refresh Rate) கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், போனை பயன்படுத்தும் போது ஸ்க்ரோலிங் மற்றும் அனிமேஷன்கள் மிக மிக ஸ்மூத்தாக இருக்கும்.

தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது போன் சூடாகாமல் இருப்பதற்காக, செக்மெண்டிலேயே மிகப்பெரிய 5334mm² அளவிலான 'வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்' (Vapor chamber cooling system) இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிப்புறத்தில் பயன்படுத்தும் போது போனின் பிரைட்னஸ் மற்றும் ஆடியோவை தானாகவே அதிகரிக்கும் புதிய 'AI அவுட்டோர் மோட்' (AI Outdoor Mode) வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

44
கேமரா, பாதுகாப்பு மற்றும் விலை விவரங்கள்

புகைப்படங்கள் எடுக்க 13MP அளவிலான AI பின்பக்க கேமரா மற்றும் 5MP முன்பக்க செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான மற்றும் சாதாரண பயன்பாட்டிற்கு ஏற்ற கேமரா அமைப்பாகும். மேலும், இந்த போன் மிலிட்டரி-கிரேடு (Military-grade) ஷாக் ரெசிஸ்டன்ஸ் மற்றும் IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங் பெற்றுள்ளதால், கீழே விழுந்தாலும் அல்லது தண்ணீர் பட்டாலும் எளிதில் பழுதாகாது.

இந்த போன் Blooming Purple மற்றும் Sprouting Green ஆகிய இரண்டு கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.13,499 ஆகவும், 4GB RAM + 128GB மாடலின் விலை ரூ.14,499 ஆகவும், டாப்-எண்ட் 6GB RAM + 128GB மாடலின் விலை ரூ.17,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் விற்பனை மார்ச் 7-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட் (Flipkart), ரியல்மி இணையதளம் மற்றும் ரீடைல் ஸ்டோர்களில் தொடங்குகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories