ரியல்மி 14 ப்ரோ மற்றும் போகோ எக்ஸ் 7 என இரண்டு போன்களும் ரூ.25,000க்குள் கிடைக்கிறது. கேமராக்கள், டிஸ்பிளே, செயல்திறனில் எந்த போன் சிறந்து என்று பார்ப்போம்.
ரியல்மி 14 ப்ரோ மற்றும் போகோ X7 எனப்படும் இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் ரூ.25,000 விலையில் புதிய ஸ்மார்ட்போன்களைத் தேடுகிறீர்களானால், போகோ X7 மற்றும் ரியல்மி 14 ப்ரோ சிறந்த தேர்வாக இருக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் கேமார, டிஸ்பிளே, பேட்டரி ஆகியவற்றை ஒப்பிட்டு விரிவாக பார்க்கலாம்.
25
Realme 14 Pro Features
டிஸ்பிளே, வடிவமைப்பு
ரியல்மி 14 ப்ரோ மற்றும் போகோ X7 மாடல்கள் இரண்டும் தனித்துவமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. ரியல்மி 14 ப்ரோவில் நிறம் மாறும் பின்புற பேனல் தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. IP69, IP68 மற்றும் IP69 மதிப்பீட்டைக் கொண்டிருப்பதால், இது மிகவும் உறுதியானது. போகோ X7, பிளாஸ்டிக் பின்புறத்தில் சதுர வடிவ கேமரா தொகுதியைக் கொண்டுள்ளது. ரியல்மி 14 ப்ரோவை விட ரூ. 4,000 குறைவான விலையில் இருந்தாலும், இது IP66 + IP68 + IP69 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
ரியல்மி 14 ப்ரோவில் 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 4500 நிட்ஸ் பிரைட்னஸை கொண்டுள்ளது. போகோ X7 6.67 இன்ச் 1.5K Oளேட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இது 3000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.
35
Poco X7 Features
கேமரா வசதிகள் என்னென்ன?
இரட்டை கேமரா அமைப்பு கொண்ட ரியல்மி 14 ப்ரோ மாடல் தெளிவான புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்துகியுள்ளது. இந்த மாடலில் சோனி IMX882 சென்சார் மற்றும் டெப்த் சென்சார் கொண்ட 50MP OIS பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
போகோ X7மாடலில் சோனி LYT-600 சென்சார் கொண்ட 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. செல்ஃபி கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி 14 ப்ரோ 16MP முன் கேமராவுடன், போகோ X7 20MP கேமராவுடன் வருகிறது.
45
Realme 14 Pro and Poco X7 Camera
பேட்டரியில் எது டாப்?
ரியல்மி 14 ப்ரோ மாடலில் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும். போகோ X7 மாடலில் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி கொடுக்கப்படுள்ளது. போகோ X7 மாடலை ஒப்பிடும்போது, ரியல்மியின் பேட்டரி அதிக ஆயுளை வழங்கக்கூடும்.
55
Realme 14 Pro and Poco X7 Price
இரண்டு போனின் விலை என்ன?
ரியல்மி 14 ப்ரோ போனின் 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.24,999 ஆகும். போகோ X7 மாடலின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.21,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போகோ X7 மாடலை விட ரியல்மி 14 ப்ரோ போனின் விலை சற்று அதிகமாக உள்ளது. இந்த இரண்டு போன்களுகும் ப்ளிப்கார்ட், அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.