ஒரு செல்ஃபி போதும்... உங்கள் வயதைச் சொல்லும் AI! பாதுகாப்பா? ஆபத்தா? இணைய உலகின் புதிய சர்ச்சை!

Published : Dec 03, 2025, 06:00 AM IST

Privacy vs Safety இணையத்தில் வயதை உறுதி செய்ய இனி செல்ஃபி போதும்! Yoti போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் AI தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது? இதில் உள்ள பிரைவசி பிரச்சனைகள் என்ன? விரிவான அலசல்.

PREV
15
Privacy vs Safety ஒரு செல்ஃபி போதும்... உங்கள் வயதைச் சொல்லும் AI! பாதுகாப்பா? ஆபத்தா? இணைய உலகின் புதிய சர்ச்சை!

இணையதளங்களில் சிறுவர்கள் ஆபாச தளங்களுக்கோ அல்லது சமூக வலைதளங்களுக்கோ செல்வதைத் தடுக்க உலக நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் 16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக வலைதளத் தடையையே அறிவித்துள்ளன. இந்தச் சூழலில், தொழில்நுட்ப உலகம் ஒரு புதிய தீர்வை முன்வைக்கிறது. அதுதான் 'AI Selfie Age Check'.

25
முகம் காட்டினால் போதும்!

இனி நீங்கள் ஒரு இணையதளத்திற்குள் நுழைய உங்கள் ஐடி கார்டை ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை. உங்கள் போன் கேமராவில் ஒரு செல்ஃபி எடுத்தால் போதும். Yoti போன்ற நிறுவனங்கள் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI), உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள், கண்களின் அமைப்பு, மற்றும் முக வடிவத்தை வைத்து உங்கள் வயது என்ன என்பதை ஒரு நிமிடத்திற்குள் கணித்துவிடும்.

35
வியாபாரம் சும்மா பிச்சிக்கிட்டு போகுது!

அரசின் கெடுபிடிகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்தத் தொழில்நுட்பத்திற்கான மவுசு கூடியுள்ளது. Meta (Facebook/Instagram), TikTok, Sony போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள் இப்போது Yoti-யின் சேவையைப் பயன்படுத்துகின்றன. தினமும் சுமார் 10 லட்சம் பேரின் வயதை இந்த AI சோதிக்கிறது. இந்தத் துறை வரும் ஆண்டுகளில் பில்லியன் டாலர் வருமானத்தைக் கொட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

45
பாதுகாப்பா? தனியுரிமை மீறளா?

இது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இதில் பல சிக்கல்கள் உள்ளன.

• டேட்டா பாதுகாப்பு: நம் முகத்தை ஸ்கேன் செய்யும் இந்த நிறுவனங்கள், அந்தத் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தினால் என்ன செய்வது? (ஆனால், பரிசோதனை முடிந்ததும் போட்டோவை அழித்துவிடுவதாக Yoti நிறுவனம் கூறுகிறது).

• பாரபட்சம் (Bias): இந்த AI கருவிகள் சில நேரங்களில் கருப்பு இனத்தவர்களின் வயதைச் சரியாகக் கணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

• ஏமாற்று வேலை: முகத்தில் அதிகப்படியான மேக்கப் (Makeup) போட்டாலோ அல்லது வெளிச்சம் குறைவாக இருந்தாலோ AI-யை ஏமாற்றிவிட முடியும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

55
எதிர்காலம் எப்படி இருக்கும்?

"இது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயல்" என்று ஒரு சாரார் கூறினாலும், "குழந்தைகளைப் பாதுகாக்க இதுவே சிறந்த வழி" என்று மறு சாரார் வாதாடுகின்றனர். வரும் காலங்களில், நீங்கள் எந்தத் தளத்திற்குச் சென்றாலும் உங்கள் முகத்தைக் காட்ட வேண்டிய நிலை வரலாம். ஆனால், அது பாதுகாப்பானதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories