கூகுளின் அடுத்த அதிரடி! ChatGPT-ல் இருக்கும் 'அந்த' சூப்பர் வசதி இப்போது ஜெமினியிலும்!

Published : Dec 02, 2025, 09:51 PM IST

Google Gemini கூகுள் ஜெமினியில் விரைவில் 'Projects' என்ற புதிய வசதி அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம் ஒரே தலைப்பில் பல அரட்டைகளை ஒருங்கிணைக்கலாம். ஃபைல் அப்லோட் வசதியும் உண்டு. முழு விவரம்.

PREV
15
ChatGPT-யை 'காப்பி' அடிக்கிறதா கூகுள்? ஜெமினியில் வரப்போகும் புதிய 'Projects' வசதி! முழு விவரம்.

செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் ChatGPT மற்றும் Google Gemini இடையே நடக்கும் போட்டி நாளுக்கு நாள் சூடுபிடிக்கிறது. இந்நிலையில், ஓபன் ஏஐ (OpenAI) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஒரு முக்கியமான வசதியை, இப்போது கூகுள் தனது ஜெமினியில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அதுதான் 'Projects'.

25
அது என்ன 'Projects' வசதி?

வழக்கமாக நாம் ஜெமினியில் பேசும்போது (Chat), எல்லா தலைப்புகளும் ஒரே ஹிஸ்டரியில் (History) இருக்கும். ஆனால், இந்த புதிய 'Projects' வசதி மூலம், ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி 'ஒர்க்பேஸ்' (Workspace) உருவாக்கிக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு கல்லூரி அசைன்மென்ட் செய்கிறீர்கள் என்றால், அதற்கு "College Project" என்று ஒரு ஃபோல்டர் போட்டு, அதற்குத் தேவையான ஃபைல்கள் மற்றும் அரட்டைகளை அதில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம். இது மற்ற அரட்டைகளுடன் குழம்பாது.

35
எப்படி வேலை செய்யும்?

ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி (Android Authority) வெளியிட்ட தகவலின்படி, கூகுள் ஆப்-பின் பீட்டா வெர்ஷனில் (Beta Version) இதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

• Focus Area: நீங்கள் உருவாக்கும் ப்ராஜெக்ட் எதைப் பற்றியது என்று ஜெமினிக்கு முன்னரே சொல்லிவிடலாம் (உதா: "நீ ஒரு சயின்ஸ் டீச்சர் போல நடந்து கொள்").

• File Upload: அந்தத் தலைப்பு தொடர்பான ஆவணங்களை (Files) அப்லோட் செய்து, அதை அடிப்படையாகக் கொண்டு கேள்விகளைக் கேட்கலாம்.

45
ஒரு சின்ன குறை!

இந்த வசதி கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இதில் ஒரு கட்டுப்பாடு இருப்பதாகத் தெரிகிறது. ஒரு ப்ராஜெக்டில் அதிகபட்சமாக 10 ஃபைல்களை மட்டுமே அப்லோட் செய்ய முடியுமாம். இது இலவச பயனர்களுக்கு மட்டுமா அல்லது கட்டணச் சந்தாதாரர்களுக்கும் (Paid Users) பொருந்துமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

55
எப்போது வரும்?

தற்போது இது சோதனைக்கட்டத்தில் (Development Stage) உள்ளது. விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை மற்றும் படிப்பிற்காக ஜெமினியைப் பயன்படுத்துபவர்களுக்கு இது நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories