இந்தப் பவர்பேங்கின் மிக முக்கியமான சிறப்பம்சம் இதில் இணைக்கப்பட்டுள்ள உள்ளிழுக்கும் (Retractable) Type-C கேபிள் ஆகும். சுமார் 70 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த கேபிளைத் தேவைப்படும்போது வெளியே இழுத்துப் பயன்படுத்திவிட்டு, வேலை முடிந்ததும் மீண்டும் பவர்பேங்கிற்குள் சுருட்டி வைத்துக்கொள்ளலாம். இதனால் தனியாக சார்ஜிங் கேபிள்களைச் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த கேபிள் 20,000 முறைக்கும் அதிகமான உள்ளிழுத்தல் மற்றும் வெளியே இழுத்தல் சோதனைகளுக்கும், 20,000 முறைக்கும் அதிகமான வளைவுத் திறன் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனை எளிதாக எடுத்துச் செல்ல லேன்யார்டு (Lanyard) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 2 சாதனங்களுக்கு சார்ஜிங் (130W வரை அவுட்புட்)
இந்தப் பவர்பேங்கில் 2 Type-C போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே நேரத்தில் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகிய 2 சாதனங்களை சார்ஜ் செய்யலாம். பவர்பேங்கில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சார்ஜ் இருக்கும்போது, 2 சாதனங்களுக்கும் தலா 65W வீதம் மொத்தம் 130W வரை அவுட்புட் வழங்கும். பேட்டரி அளவு 70 சதவீதத்திற்குக் கீழே குறையும்போது, 2 சாதனங்களுக்கும் தலா 45W வீதம் சார்ஜிங் கிடைக்கும். இந்த 2 போர்ட்களையும் சாதனங்களை சார்ஜ் செய்யவும், பவர்பேங்கை மீண்டும் ரீசார்ஜ் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.