200MP கேமரா, 9000mAh பேட்டரி: ஸ்மார்ட்போன் சந்தையை அதிரவிடப் போகும் ஹானர் 700 சீரிஸ்:

Published : Nov 14, 2026, 03:10 PM IST

200MP கேமரா மற்றும் 9000mAh பேட்டரியுடன் வெளியாகும் புதிய ஹானர் 700 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீட்டு தகவல்களை பற்றி பார்போம்.

PREV
14
புதிய ஹானர் 700 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

வருகிற நவ.23ஆம் தேதி இந்த ஹானர் 700 சீரிஸ் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. இதில் ஹானர் 700 (Honor 700), ஹானர் 700எஸ் (Honor 700S) மற்றும் ஹானர் 700 ப்ரோ (Honor 700 Pro) ஆகிய 3 மாடல்கள் இடம்பெற்றுள்ளன. வெளியீட்டுக்கு முன்பே இந்த 3 மாடல்களின் சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளன. சீன சந்தைக்குப் பிறகு இந்த மாடல்கள் உலகளாவிய (Global) சந்தையிலும் எதிர்பார்க்கப்படுகின்றன.

24
ஹானர் 700 அம்சங்கள் (HONOR 700 Specifications)

இயக்க முறைமை & சிப்செட் - ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் மேஜிக்ஓஎஸ் 11 தளத்துடன், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 8s Gen 4) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா - 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 50 எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே - 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.57 இன்ச் டிஸ்பிளே மற்றும் ஏ.ஐ-சார்ந்த டூயல் டிஸ்பிளே வசதி உள்ளது.

பேட்டரி & சார்ஜிங் - 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாபெரும் 9000mAh (Qinghai Lake) பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

மெமரி (Memory) - 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களில் கிடைக்க இருக்கிறது.

34
ஹானர் 700எஸ் அம்சங்கள் (HONOR 700S Specifications)

சிப்செட் & ஓஎஸ் - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Octa Core Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் ஆண்ட்ராய்டு 17 அடிப்படையிலான மேஜிக்ஓஎஸ் 11 கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா - 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் கேமரா அமைப்பு மற்றும் 50 எம்பி செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே & பேட்டரி - 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.57 இன்ச் டிஸ்பிளே மற்றும் டூயல் ஸ்கிரீன் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9000mAh பேட்டரி இதில் இடம்பெற்றுள்ளது.

மெமரி- 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்களில் வெளிவருகிறது.

44
ஹானர் 700 ப்ரோ அம்சங்கள் (HONOR 700 Pro Specifications)

சிப்செட் & டிஸ்பிளே - சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Octa Core Snapdragon 8 Gen 5) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.57 இன்ச் டிஸ்பிளே மற்றும் டூயல் டிஸ்பிளே வடிவமைப்புடன் வருகிறது.

கேமரா - 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி & சார்ஜிங் - 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 9000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

மெமரி & நிறங்கள் - 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்க உள்ளது. மேலும் இது ப்ளூ டோன் (Blue Tone), கிளியர் ஸ்கை (Clear Sky), பின்க் மிஸ்ட் (Pink Mist) மற்றும் கோல்டு ஒயிட் (Cold White) ஆகிய கலர் ஆப்ஷன்களில் வெளியாகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories