
பட்ஜெட்டை அதிகரிக்காமல், அனைத்து நவீன சிறப்பம்சங்களும் நிறைந்த ஒரு சிறந்த ஸ்மார்ட்வாட்சை வாங்கத் திட்டமிட்டுள்ளீர்களா? ரூ.10,000-க்கு கீழ் இந்தியச் சந்தையில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்வாட்சுகள் குறித்த முழுமையான விவரங்கள் இதோ.
ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்சுகள் உடல் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் இலக்குகளை அடைய மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இந்த பிரிவில் உள்ள பெரும்பாலான வாட்சுகளில் இதயத் துடிப்பு (Heart rate), ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு (SpO2), தூக்கம் மற்றும் மன அழுத்தத்தைக் கண்காணிக்கும் வசதிகள் உள்ளன. மேலும் நடைப்பயிற்சி, ஓட்டம், யோகா உள்ளிட்ட பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோடுகளும் இதில் வழங்கப்படுகின்றன. விலை உயர்ந்த வாட்சுகளின் துல்லியத்திற்கு இணையாக இல்லாவிட்டாலும், தினசரிப் பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களையும் இவை கொண்டுள்ளன.
பட்ஜெட் விலையில் பிரீமியம் தரத்திலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ள டைட்டன் செலஸ்டார், இந்தியாவின் சிறந்த ஸ்மார்ட்வாட்சுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள பில்ட்-இன் ஜிபிஎஸ் (Inbuilt GPS), சிங்கிள்சின்க் ப்ளூடூத் காலிங் (SingleSync Bluetooth calling) மற்றும் அவசரகால எஸ்ஓஎஸ் (SOS) வசதி ஆகியவை வெளிப்புறப் பயணங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதன் விலை ரூ.9,995 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்கள் - 1.43 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே (750 நிட்ஸ் பிரகாசம்), ஆண்ட்ராய்டு இயங்குதளம், பீஜ் மற்றும் கிரே நிறம், இதயத் துடிப்பு மற்றும் மல்டிஸ்போர்ட் டிராக்கர், 10 நாட்கள் பேட்டரி ஆயுள், 46.5 கிராம் எடை. வியர்வையைத் தாங்கும் நீடித்து உழைக்கும் ஸ்ட்ராப், ஸ்டைலான பிரீமியம் வடிவமைப்பு, கொடுத்த பணத்திற்கு ஏற்ற மதிப்பு.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்ற இந்த ரியல்மி ஸ்மார்ட்வாட்ச், சிறந்த செயல்திறன் மற்றும் மலிவு விலையை வழங்குகிறது. ரூ.5,000-க்கும் குறைவான விலையில் (ரூ.4,499 முதல் ரூ.4,999 வரை) கிடைக்கும் இதில், ப்ளூடூத் காலிங், பிடி இண்டர்காம் (BT intercom), ஐபி68 (IP68) மெட்டாலிக் வடிவமைப்பு, ப்ளூடூத் மியூசிக் பிளேபேக் மற்றும் கேம் மோட் போன்ற பல அம்சங்கள் உள்ளன.
சிறப்பம்சங்கள் - 1.97 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, கருப்பு மற்றும் கிரே நிறம், இதயத் துடிப்பு மானிட்டர், இன்டிபென்டன்ட் ஜிபிஎஸ் (Independent GPS), 16 நாட்கள் பேட்டரி ஆயுள். துல்லியமான இதயத் துடிப்பு கண்காணிப்பு, ஃபிட்னஸ் டிராக்கிங்கிற்கு மிகவும் உதவியாக இருக்கும், நேர்த்தியான டிசைன், பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த தேர்வு.
எடை குறைவான மற்றும் பிரீமியம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசனை கொண்ட இந்த வாட்ச், 'நாய்ஸ் ஏஐ ப்ரோ' (Noise AI Pro) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதன் மூலம் ஆரோக்கியம் குறித்த தகவல்களைப் பெறுவதுடன், வாய்ஸ் கமாண்ட் (Voice commands) வசதியையும் பயன்படுத்த முடியும். இதன் விலை ரூ.6,999 முதல் ரூ.7,999 வரை உள்ளது.
சிறப்பம்சங்கள் - 1.46 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே (1000 நிட்ஸ் பிரகாசம்), கருப்பு நிறம், அலாரம் மற்றும் டச் ஸ்கிரீன் வசதி, 9 நாட்கள் வரை பேட்டரி ஆயுள், 30 மீட்டர் வரை வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு. நீடித்து உழைக்கும் பிரீமியம் டிசைன், சிறந்த பேட்டரி ஆயுள், கொடுத்த பணத்திற்கு ஏற்ற தரம்.
நேர்த்தியான மெட்டல் டிசைன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை விரும்புபவர்களுக்கு டைட்டன் எவோக் 2.0 சிறந்த தேர்வாகும். இதில் 24x7 இதயத் துடிப்பு கண்காணிப்பு, ஆட்டோ ஸ்ட்ரெஸ், தூக்க கண்காணிப்பு, பெண்களுக்கான பிரத்யேக ஆரோக்கிய வசதிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3டி டைனமிக் வாட்ச் ஃபேஸ்களும் இதில் உள்ளன. இதன் விலை ரூ.7,995 முதல் ரூ.8,995 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் - 1.32 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே (1000 நிட்ஸ் பிரகாசம்), பிரவுன் நிறம், ப்ளூடூத் காலிங் மற்றும் ஸ்ட்ரெஸ் டிராக்கிங், 5 நாட்கள் பேட்டரி ஆயுள், 56.8 கிராம் எடை. ஸ்டைலான மற்றும் கச்சிதமான டிசைன், உறுதியான கட்டமைப்பு, திருப்திகரமான பேட்டரி ஆயுள்.
எடை குறைவான அமேஸ்ஃபிட் பிப் 6 ஸ்மார்ட்வாட்சில் 140-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஏ.ஐ கோச் (AI coach) வசதி வழங்கப்பட்டுள்ளது. துல்லியமான நேவிகேஷனுக்கான ஜிபிஎஸ், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் இதயத் துடிப்பு, ரத்த ஆக்சிஜன், தூக்கம் ஆகியவற்றைச் துல்லியமாகக் கண்காணிக்கும் வசதிகள் இதில் உள்ளன. இதன் விலை ரூ.7,499 முதல் ரூ.7,999 வரை உள்ளது.
சிறப்பம்சங்கள் - அமோலெட் டிஸ்ப்ளே, ஜெப் ஓஎஸ் (Zepp OS) இயங்குதளம், பிரவுன் நிறம், ஏ.ஐ அசிஸ்டன்ஸ் மற்றும் ஜிபிஎஸ், 512 எம்பி மெமரி ஸ்டோரேஜ், 14 நாட்கள் பேட்டரி ஆயுள். நம்பகமான தரம், நீண்ட பேட்டரி ஆயுள், பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த மதிப்பு.