போக்கோ நிறுவனம் மார்வெல் சூப்பர்ஹீரோ Iron Man தீமுடன் புதிய “போக்கோ X8 Pro Iron Man Edition” ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. விரைவில் அறிமுகமாகவுள்ள Redmi Turbo 5-ன் rebranded பதிப்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
போக்கோ ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் செய்தி வெளியாகி உள்ளது. மார்வெல் சூப்பர்ஹீரோ அயர்ன் மேன் (Iron Man) தீமுடன் போக்கோ நிறுவனம் புதிய “போக்கோ X8 Pro Iron Man Edition” ஸ்மார்ட்போனை தயாரித்து வருகிறது. இது ஒரு சாதாரண மொபைல் இல்லை. செயல்திறன்-க்கான ஒரு “ஆயுதம்” மாதிரி இருக்கும் என டெக் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த போன் சமீபத்தில் தாய்லாந்து NBTC சான்றிதழ் பட்டியலில் 24 ஜனவரி 2026 அன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
25
ரெட்மி டர்போ 5 ரீப்ராண்ட்
இதில் 2511FPC34G என்ற மாடல் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான X7 Pro Iron Man Edition நல்ல வரவேற்பை பெற்றதால், போக்கோ இந்த புதிய சிறப்பு பதிப்பு மாடலை கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மொபைல், சீனாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி டர்போ 5-ன் rebranded பதிப்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
35
போக்கோ X8 Pro டிஸ்பிளே
டிஸ்ப்ளே பகுதியில், இதில் 6.67-inch 1.5K OLED ஸ்கிரீன் வரும் வாய்ப்பு அதிகம். மேலும் 144Hz புதுப்பிப்பு விகிதம் மற்றும் 3,200 nits அதிகபட்ச பிரைட்னஸ் இருப்பதால், வெயிலிலும் ஸ்கிரீன் தெளிவாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக IP68/IP69 நீர் & தூசி பாதுகாப்பு-வும் இருக்கலாம். Performance-க்கு முக்கியம் கொடுக்கும் இந்த போனில் MediaTek Dimensity 8500 Ultra chipset இருக்கும்.
இதனால் gaming மற்றும் multitasking-ல் lag இல்லாத அனுபவம் கிடைக்கும். கேமரா பகுதியில், பின்புறம் 50MP பிரதான + 8MP அல்ட்ரா-வைடு + 32MP டெலிஃபோட்டோ என மூன்று அமைப்பு இருக்கலாம். முன்பக்கத்தில் 32MP கேமராவும் வர வாய்ப்பு உள்ளது. இந்த சிறப்பு பதிப்பு-ன் பெரிய ஹைலைட் பேட்டரி தான். இதில் 5,500mAh முதல் 8,000mAh வரை பேட்டரி திறன் இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
55
போக்கோ X8 Pro விலை
மேலும் 100W வேகமாக சார்ஜிங் ஆதரவு கிடைத்தால், குறைந்த நேரத்தில் சார்ஜ் ஆகும். போன் Xiaomi HyperOS 2.0-ல் இயங்கலாம். இந்தியாவில் 12ஜிபி ரேம் + 512ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை சுமார் ரூ.45,990 ஆக இருக்கலாம் எனவும், அயர்ன் மேன் பெட்டி + தீம்கள் + துணைக்கருவிகள் வழக்கமான பதிப்பு-ஐ விட அதிகமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2026 பிப்ரவரி மாதத்தில் வர வாய்ப்பு உள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.