POCO F6 Deadpool Edition Launch
சமீபகாலமாக தொழில்நுட்ப சந்தையில் இதுபோன்ற ஸ்மார்ட் போன்கள் பற்றி அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் இது போன்ற லிமிடெட் எடிஷன் போன்களை வெளியிட்டு வருகின்றது.
Poco F6
தற்போது இந்த வரிசையில், சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான போகோ புதிய மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. போக்கோ எப்6 டெட்பூல் லிமிடெட் எடிஷன் (Poco F6 Deadpool Limited Edition) போன் அறிமுகப்படுத்தப்பட்டது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான போகோ, இந்திய சந்தையில் புதிய போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Deadpool
இந்த போன் Poco F6 என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் மார்வெல் சூப்பர் ஹீரோ டெட்பூல் தீம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமராவைச் சுற்றி டெட்பூல் லோகோ இடம் பெற்றுள்ளது.காமிக்ஸ் மற்றும் மார்வெல் திரைப்படங்களின் ரசிகர்களை மனதில் வைத்து, இந்த லிமிடெட் எடிஷன் போன் கொண்டுவரப்பட்டுள்ளது.
F6 Deadpool Limited Edition
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போனின் விற்பனை ஆகஸ்ட் 7ம் தேதி முதல் Flipkartல் நடைபெறவுள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம். போக்கோ எப்6 டெட்பூல் லிமிடெட் எடிஷன் போன் 12GB RAM, 256GB சேமிப்பு வகையின் விலை ரூ. 33,999 நிர்ணயிக்கப்பட்டது.
Marvel
ஆனால் வங்கியின் சலுகையின் ஒரு பகுதியாக இந்த போனில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடியுடன் ரூ. 29,999 வாங்கலாம். இதன் அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்தத் திரையில் 1.5K தெளிவுத்திறன், 120Hz புதுப்பிப்பு விகிதம் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் செயல்படுகிறது.