பிக்சல் வாங்குறவங்க தான் இப்போ லக்கி.. Republic Day Sale முன்பே சூப்பர் டீல் வந்துருச்சு!

Published : Jan 14, 2026, 10:29 AM IST

2025-ல் அறிமுகமாகவுள்ள கூகுள் பிக்சல் 10 மாடல் தற்போது தள்ளுபடியுடன் கிடைக்கிறது. Tensor G5 சிப்செட், Gemini AI மற்றும் 7 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் இந்த போன் வருகிறது.

PREV
14
கூகுள் பிக்சல் 10 விலை குறைவு

2025-ல் அறிமுகமான கூகுள் பிக்சல் 10 மாடலுக்கு இப்போது Flipkart-ல் பெரிய தள்ளுபடி. குடியரசு தின சலுகை வரும் முன்பே விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் போன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு சூப்பர் வாய்ப்பாக உள்ளது. குறிப்பாக கேமரா குவாலிட்டி மற்றும் Gemini AI வசதிகள் இந்த போனை இன்னும் ஸ்பெஷலாக மாற்றுகின்றன.

24
பிக்சல் 10 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

Flipkart லிஸ்டிங்கில் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் இப்போது ரூ.74,999-க்கு கிடைக்கிறது. இது லாஞ்ச் விலையான ரூ.79,999-ஐ விட ரூ.5,000 குறைவு. அதோடு Flipkart Axis Bank மற்றும் SBI கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் ரூ.4,000 டிஸ்கவுண்ட் கிடைப்பதால், மொத்த சேமிப்பு ரூ.9,000 வரை செல்லும். Frost, Indigo, Lemongrass, Obsidian என 4 நிறங்களில் போன் வருகிறது. பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் இன்னும் கூடுதலாக காசு சேமிக்க முடியும்.

34
பிக்சல் 10 வங்கி தள்ளுபடி

இந்த பிக்சல் 10-ல் கூகுள்-ன் புதிய Tensor G5 சிப்செட் இருப்பதால் வேகமான செயல்திறனும், AI அடிப்படையிலான ஸ்மார்ட் அம்சங்களும் கிடைக்கின்றன. மேலும் இது Android 16-ஐ அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. முக்கியமாக, 7 ஆண்டுகள் வரை ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் தரப்படும் என கூகுள் உறுதி செய்துள்ளதால், நீண்ட காலம் புதுமையாக பயன்படுத்தப்படுகிறது. Gemini AI மூலம் Assistant அனுபவமும் இன்னும் ஸ்மார்ட்டாகும்.

44
கூகுள் பிக்சல் 10 அம்சங்கள்

டிஸ்ப்ளேவாக 6.3 இன்ச் OLED திரை, 120Hz ரிஃப்ரெஷ் ரேட், 3000 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. கேமராவில் 48MP OIS பிரைமரி, 10.8MP 5x டெலிபோட்டோ, 13MP அல்ட்ரா-வைடு என ட்ரிபிள் செட்அப் தரப்படுகிறது. 10.5MP செல்ஃபி கேமரா, 4970mAh பேட்டரி, 30W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories