ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடம்பிடித்துள்ள ஒப்போ (Oppo) நிறுவனம், தனது ரெனோ சீரிஸில் புதிய வரவாக 'ஒப்போ ரெனோ 15c' (Oppo Reno 15c) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய மாடல்களை விட செயல்திறன், கேமரா மற்றும் பேட்டரி என அனைத்து விதத்திலும் இந்த போன் மெருகேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் பிரம்மாண்ட பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த பிராசஸர் பயனர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
விலை மற்றும் நிறங்கள்
தற்போதைக்கு சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த போனின் விலை, இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.37,000-ல் (CNY 2,899) தொடங்குகிறது. இது 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மாடலுக்கான விலையாகும். இதன் டாப் வேரியண்டான 12GB + 512GB மாடலின் விலை சுமார் ரூ.41,000 ஆக உள்ளது. அரோரா ப்ளூ, காலேஜ் ப்ளூ மற்றும் ஸ்டார்லைட் போ ஆகிய மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் இது கிடைக்கிறது.