புத்தாண்டுக்கு முன்பு ரீசார்ஜ் விலை அதிகரிக்கும்.? அதிர்ச்சியில் ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்கள்

Published : Dec 15, 2025, 01:45 PM IST

இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடபோன்–ஐடியா (Vi) ஆகியவை விரைவில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
14
ரீசார்ஜ் விலை உயர்வு

இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்–ஐடியா (Vi) ஆகியவை விரைவில் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மொபைல் ஆப் அதிகமாக நம்பியிருக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமான குடும்பங்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பே இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம் என கூறப்படுவது பயனர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.

24
ஜியோ ரீசார்ஜ்

இந்த நிலையில், பிஎஸ்என்எல் பயனர்கள் மட்டும் தற்போதைக்கு சற்றே நிம்மதியாக இருக்கலாம். ஏனெனில், பிஎஸ்என்எல் தனது ரீசார்ஜ் திட்டங்களில் இப்போது வரை பெரிய அளவிலான விலை உயர்வை அறிவிக்கவில்லை. சில திட்டங்களில் வேலிடிட்டி குறைக்கப்பட்டிருந்தாலும், அடிப்படை ரீசார்ஜ் விலை மாற்றமின்றி தொடர்வதால், குறைந்த செலவில் சேவையைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது ஒரு ஆறுதலாக உள்ளது. தகவல்களின் படி, ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் 10 முதல் 12 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

34
ஏர்டெல் ரீசார்ஜ்

இதன் முக்கிய காரணமாக, தங்கள் வருமானம் மற்றும் லாபத்தை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை நிறுவனங்கள் முன்வைப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த விலை உயர்வு குறித்து இதுவரை எந்த நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனாலும், இந்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதால், பயனர்களிடையே குழப்பமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே சில ரீசார்ஜ் திட்டங்களில் பயன்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விலை உயர்வு வந்தால் பயனர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

44
டெலிகாம் விலை உயர்வு

இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால், டிசம்பர் மாதம் முதல் மொபைல் ரீசார்ஜ் செலவு மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகலாம். இதனால், புத்தாண்டை எதிர்நோக்கும் ஸ்மார்ட்போன் பயனர்கள் கூடுதல் செலவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில், தொடர்ந்து விலை உயர்வுகள் செய்யப்பட்டால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனர்களின் நம்பிக்கையை இழக்கும் அபாயமும் உருவாகலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories