பிஎஸ்என்எல் நிறுவனம் 165 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரம்பற்ற அழைப்புகள், 24ஜிபி டேட்டா மற்றும் இலவச ரோமிங் ஆகியவற்றை வழங்குகிறது.
அரசுத் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), குறைந்த செலவில் அதிக பயன் தரும் ரீசார்ஜ் திட்டங்களால் மீண்டும் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீண்ட கால வேலிடிட்டி, வரம்பில்லா அழைப்புகள், டேட்டா உள்ளிட்ட பல வசதிகளை ஒரே திட்டத்தில் வழங்குவது பிஎஸ்என்எல்-ன் முக்கிய பலமாக உள்ளது. அந்த வகையில், 165 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
25
பிஎஸ்என்எல் மலிவு ரீசார்ஜ்
பிஎஸ்என்எல் 165 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.897 விலையில் கிடைக்கும் இந்த திட்டத்தில், இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பில்லா அழைப்புகள் வழங்கப்படுகின்றன. குறைந்த செலவில் நீண்ட கால சிம் ஆக்டிவ் வசதி தேடும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் இன்னொரு முக்கிய அம்சம் இலவச தேசிய ரோமிங் வசதியாகும்.
35
பிஎஸ்என்எல் நீண்ட வேலிடிட்டி
பயனர்கள் நாடு முழுவதும் கூடுதல் கட்டணம் இன்றி சேவையை பயன்படுத்தலாம். மேலும், மொத்தம் 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை 165 நாட்கள் முழுவதும் பயனர் தங்களுக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் இதில் அடங்கும். இதற்கு மாற்றாக, பிஎஸ்என்எல்-ல் 150 நாட்கள் வேலிடிட்டியுடன் இன்னொரு திட்டமும் உள்ளது.
ரூ.997 விலையில் கிடைக்கும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு, வரம்பில்லா அழைப்புகள், இலவச தேசிய ரோமிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க் விரிவாக்கப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
55
பிஎஸ்என்எல் இலவச ரோமிங்
சமீபத்தில் இந்தியா முழுவதும் 4G சேவையை தொடங்கியுள்ள பிஎஸ்என்எல், டெல்லி மற்றும் மும்பையில் விரைவில் 5G சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஒரு லட்சம் 4G டவர்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் 5G-க்கு தயார் நிலையில் உள்ளன. முழுமையாக இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த நெட்வொர்க், பிஎஸ்என்எல்-க்கு புதிய நம்பிக்கையை உருவாக்கி வருகிறது.