ரூ.10 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த கேமரா போன்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ!

Published : Dec 15, 2025, 03:45 PM IST

2025-ல் ரூ.10,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா போன்களையும், அதன் விலை, அம்சங்கள் போன்றவற்றை விரிவாக பார்க்கலாம். இந்த மொபைல்கள் தினசரி புகைப்படம் மற்றும் கான்டென்ட் கிரியேஷனுக்கு ஏற்றவையாக உள்ளன.

PREV
15
ரூ.10 ஆயிரத்திற்குள் உள்ள கேமரா போன்கள்

இன்றைய காலத்தில் தரமான புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் அவசியமில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, ரூ.10,000-க்குள் கிடைக்கும் பல ஸ்மார்ட்போன்களிலேயே சக்திவாய்ந்த கேமராக்கள் வழங்கப்படுகின்றன. 2025-ல் இந்த விலை பிரிவில் உள்ள சில மொபைல்கள், தினசரி புகைப்படம், Instagram Reels, YouTube Shorts போன்ற கான்டென்ட் கிரியேஷனுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளன. குறைந்த பட்ஜெட்டில் கேமரா போன் தேடுபவர்களுக்கு இவை சிறந்த தேர்வுகளாக பார்க்கப்படுகின்றன.

25
சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்

இந்த பட்டியலில் முதலிடத்தில் இடம்பெற்றிருப்பது ரெட்மி 14சி (Redmi 14C). 6.88 இன்ச் பெரிய IPS LCD டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட இந்த போன், கண்ணுக்கு இனிமையான அனுபவத்தை தருகிறது. 50MP ரியர் கேமரா பகல் வெளிச்சத்தில் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. 8MP முன்பக்க கேமரா சமூக ஊடக பயன்பாட்டிற்கு போதுமான தரத்தை வழங்குகிறது. இந்த போன் ரூ.8,998 விலையில் கிடைக்கிறது.

35
குறைந்த விலை கேமரா போன்

அடுத்ததாக சாம்சங் கேலக்சி ஏ07 (Samsung Galaxy A07) மாடல் இடம்பிடிக்கிறது. 6.7 இன்ச் PLS LCD டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட இந்த போன், 50MP ரியர் கேமராவுடன் வருகிறது. சாம்சங்கின் இமேஜ் புராசசிங் காரணமாக இயற்கையான நிறங்களுடன் புகைப்படங்கள் கிடைக்கின்றன. 8MP செல்ஃபி கேமராவும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது. இந்த போன் ரூ.7,245 குறைந்த விலையில் கிடைப்பது இதன் பெரிய பலம்.

45
பட்ஜெட் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா ஜி35 (Motorola G35) மாடல், குறிப்பாக செல்ஃபி விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. 6.72 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 50MP + 8MP டூயல் ரியர் கேமரா அமைப்பு இதில் உள்ளது. 16MP முன்பக்க கேமரா இந்த பட்டியலில் சிறந்த செல்ஃபி அனுபவத்தை தருகிறது. இதன் விலை ரூ.9,999 ஆகும்.

55
சிறந்த பட்ஜெட் போன்கள்

இதற்கு அடுத்ததாக சாம்சங் கேலக்சி எப்06 (Samsung Galaxy F06) மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ (Infinix Hot 60i) மாடல்கள் வருகின்றன. Galaxy F06-l 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 50MP ரியர் கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா உடன் வருகிறது. சாம்சங்கின் HDR மற்றும் கலர் டியூனிங் செய்த புகைப்படங்களை தருகிறது. Infinix Hot 60i-l 6.75 இன்ச் 120Hz டிஸ்ப்ளே, 50MP ரியர் கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமரா உள்ளது. வீடியோ கால் மற்றும் அடிப்படை செல்ஃபிக்கு இது போதுமானது. இரண்டும் ரூ.9,999 விலை வரம்புக்குள் கிடைக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories