8,000mAh பேட்டரி, 144Hz AMOLED டிஸ்பிளே: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஒப்போ கே14 பிளஸ்!

Published : Oct 08, 2026, 06:30 PM IST

புதிய 'ஒப்போ கே14 பிளஸ்' ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் முதல் நாளில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 8000mAh பேட்டரி மான்ஸ்டர் ஸ்மார்ட்போனின் அறிமுக சலுகை, முழு விவரங்கள் உள்ளே!

PREV
14
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஒப்போ கே14 பிளஸ்

கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 'ஒப்போ கே14 பிளஸ்' ஸ்மார்ட்போன், இந்தியாவில் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் (Flipkart Big Billion Days) விற்பனையின் முதல் நாளிலேயே இந்த போன் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

24
விலை & அறிமுகச் சலுகைகள் என்ன?

ஒப்போ கே14 பிளஸ் ஸ்மார்ட்போன் 3 வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது.

6GB RAM + 128GB Storage: ரூ. 29,999

8GB RAM + 128GB Storage: ரூ. 32,999

8GB RAM + 256GB Storage: ரூ. 35,999

ஆஃபர்கள்

அறிமுகச் சலுகையாக, முன்னணி வங்கிகளின் கார்டு பயன்படுத்தி வாங்கும்போது ரூ. 4,000 உடனடி தள்ளுபடி (Instant Bank Discount) வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த போன்களை முறையே ரூ. 25,999, ரூ. 28,999 மற்றும் ரூ. 31,999 என்ற சலுகை விலையில் பெற முடியும். மேலும், 6 மாத கட்டணமில்லா மாதத்தவணை (No-Cost EMI) வசதியும் உள்ளது. இந்த போன் 'சோலார் ஆரஞ்ச்' (Solar Orange), 'ஸ்டார் ஒயிட்' (Star White) ஆகிய 2 வண்ணங்களில் பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

34
சிறப்பம்சங்கள் & தொழில்நுட்ப விவரங்கள்

டிஸ்பிளே: 6.77 இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே (2,772 × 1,272 பிக்சல்கள்). இது அடாப்டிவ் 120Hz மற்றும் அதிகபட்சமாக 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) ஆதரவைக் கொண்டுள்ளது.

செயலி (Processor): மீடியாடெக் டைமன்சிட்டி 7360 மேக்ஸ் (MediaTek Dimensity 7360 Max) சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் 8GB வரை LPDDR4X RAM மற்றும் 256GB வரை UFS 3.1 சேமிப்பக வசதி உள்ளது.

கேமரா: பின்புறத்தில் f/1.8 அப்பேர்ட்சர் மற்றும் 2-axis ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, மேலும் போர்ட்ரெய்ட் படங்களுக்கான 2 மெகா பிக்சல் மோனோக்ரோம் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி, வீடியோ அழைப்புகளுக்காக f/2.4 அப்பேர்ட்சர் கொண்ட 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.

44
சிறப்பம்சங்கள் & தொழில்நுட்ப விவரங்கள் - 2

பேட்டரி & சார்ஜிங்: பிரம்மாண்டமான 8,000mAh பேட்டரி மற்றும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டது. மேலும், பிற உபகரணங்களை சார்ஜ் செய்ய 10W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒப்போவின் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) இயங்குதளத்தில் செயல்படுகிறது. ஸ்கிரீனிலேயே கைரேகை பதிவு செய்யும் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) உள்ளது. போனின் தடிமன் 8.4 மிமீ மற்றும் எடை 207 கிராம் ஆகும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories