புதிய Enco Buds 3 Pro, 12.4mm டைட்டானியம் பூசப்பட்ட டிரைவர்கள் (titanium-plated drivers) மற்றும் மேம்படுத்தப்பட்ட காப்பர் காயில்களுடன் (copper coils) வருகின்றன. இவை மேம்பட்ட ஆடியோவை வழங்கும் என்று கூறப்படுகிறது. இவை ப்ளூடூத் 5.4v, இரட்டை சாதனம் இணைத்தல் (dual-device pairing) மற்றும் AAC/SBC கோடெக்குகள் (codecs) ஆகியவற்றை ஆதரிப்பதால், சீரான இணைப்பு கிடைக்கும்.
கேமிங் பிரியர்களுக்காக, இதில் குறைந்த லேடன்சி (low-latency) மோட் உள்ளது. இது கேமிங் தாமதத்தை வெறும் 47ms ஆக குறைத்து, சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். பயனர்கள் Clear Vocals, Bass Boost, மற்றும் Original Sound ஆகிய மூன்று முன்செட் ஒலி முறைகளுக்கு (preset sound modes) தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்.