மின்மினி பூச்சி மாதிரி ஜொலிக்குதே.. இருட்டில் ஒளிரும் அதிசய போன்! நத்திங் செய்த தரமான சம்பவம் - விலை என்ன?

Published : Dec 10, 2025, 09:29 PM IST

Nothing Phone 3a நத்திங் போன் 3a கம்யூனிட்டி எடிஷன் இந்தியாவில் அறிமுகம். வெறும் 1000 போன்கள் மட்டுமே விற்பனை. விலை ரூ.28,999. டிசம்பர் 13 பெங்களூரில் விற்பனை.

PREV
16
Nothing Phone 3a "இதை வாங்க கொடுத்து வச்சிருக்கணும் போல.." நத்திங் போன் 3a ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்!

ஸ்மார்ட்போன் உலகில் வித்தியாசமான டிசைன்களுக்குப் பெயர் போன நிறுவனம் 'நத்திங்' (Nothing). தற்போது இந்நிறுவனம் தனது ரசிகர்களுடன் இணைந்து உருவாக்கிய புதிய "நத்திங் போன் 3a கம்யூனிட்டி எடிஷன்" (Nothing Phone 3a Community Edition) என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. "உலகம் முழுவதும் வெறும் 1000 போன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்" என்ற அறிவிப்பு ஸ்மார்ட்போன் பிரியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

26
மக்களே உருவாக்கிய போன்!

வழக்கமாக ஒரு போனை நிறுவனத்தின் இன்ஜினியர்கள் தான் வடிவமைப்பார்கள். ஆனால், இந்த போன் அப்படியல்ல. நத்திங் நிறுவனம் 'கம்யூனிட்டி எடிஷன் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஒரு போட்டியை நடத்தியது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட நத்திங் ரசிகர்கள் தங்கள் ஐடியாக்களைக் கொடுத்தனர். அவர்களில் சிறந்த டிசைன் மற்றும் சாப்ட்வேர் ஐடியாக்களைத் தேர்ந்தெடுத்து இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.

36
விலை மற்றும் சிறப்பம்சங்கள்

இந்த லிமிடெட் எடிஷன் போன் ஒரே ஒரு வேரியண்டில் (12GB RAM + 256GB ஸ்டோரேஜ்) மட்டுமே வருகிறது. இதன் விலை ரூ.28,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹார்டுவேர் அம்சங்களைப் பொறுத்தவரை, இது சாதாரண நத்திங் போன் 3a போலவே இருக்கும். ஆனால், இதன் டிசைன் மற்றும் இன்டர்ஃபேஸ் (UI) முற்றிலும் மாறுபட்டது.

46
90ஸ் கிட்ஸ் ஞாபகம்

இந்த போனின் வெளிப்புற டிசைனுக்கான போட்டியில் வென்றவர் எம்ரே கைகானாசி (Emre Kayganacı). இவரது டிசைன், 1990களின் பிற்பகுதி மற்றும் 2000களின் ஆரம்பக்கட்ட தொழில்நுட்பத்தை நினைவூட்டும் வகையில் உள்ளது. 'குளோ இன் தி டார்க்' (Glow in the dark) பாணியில் மின்மினி பூச்சி போல ஒளிரும் பின்புற பேனல் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் வித்யாசமாகவும், ரெட்ரோ ஸ்டைலிலும் இருக்கிறது.

56
மென்பொருள் மற்றும் வால்பேப்பர் (UI/UX)

சாப்ட்வேர் பிரிவில் ஜாட் ஜோக் (Jad Zock) என்பவர் வடிவமைத்த புதிய 'லாக் ஸ்கிரீன்' மற்றும் வால்பேப்பர் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. நத்திங் நிறுவனத்தின் லண்டன் குழுவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த வால்பேப்பர்களில் நீலம் மற்றும் ஊதா நிறங்கள் கலந்த நான்கு புதிய வடிவங்கள் உள்ளன. இது கண்களுக்கு உறுத்தல் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.

66
இந்தியாவில் எப்போது விற்பனை?

இந்த அரிய வகை போனை வாங்க விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பு பெங்களூரில் காத்திருக்கிறது. வரும் டிசம்பர் 13 அன்று பெங்களூரில் நடைபெறும் சிறப்பு விற்பனை நிகழ்ச்சியில் (Drop Event) இந்த போன் கிடைக்கும். வெறும் 1000 யூனிட்கள் மட்டுமே உலகம் முழுவதும் உள்ளதால், இது ஒரு உண்மையான 'கலெக்டர்ஸ் பீஸ்' (Collector’s device) ஆக மாறப்போகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories