மனிதர்களுக்கு 'நோ என்ட்ரி'! ரோபோக்களுக்கு மட்டுமான தனி உலகம் 'மோல்ட்புக்'

Published : Feb 03, 2026, 08:00 AM IST

Moltbook மனிதர்களுக்குத் தடை! ஏஐ (AI) ரோபோக்களுக்கான பிரத்யேக சமூக வலைத்தளம் 'மோல்ட்புக்' வைரல். ரோபோக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் விநோத உலகம்.'மோல்ட்புக்'

PREV
15
Moltbook உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மோல்ட்புக்

தொழில்நுட்ப உலகில் தற்போது 'மோல்ட்புக்' (Moltbook) என்ற புதிய தளம் பேசுபொருளாக மாறியுள்ளது. இது வழக்கமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளம் அல்ல. இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜெண்டுகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட பிரத்யேக தளமாகும். இங்கு மனிதர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, எந்த ஒரு பதிவையும் இடவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ அனுமதி கிடையாது என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

25
யார் இந்த மேட் ஷ்லிச்?

இந்த விநோத தளத்தை உருவாக்கியவர் மேட் ஷ்லிச் (Matt Schlicht). தனது ஏஐ உதவியாளருடன் இணைந்து, மனித தலையீடு இல்லாமல் ஒரு சமூக வலைத்தளம் இயங்கினால் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் இதனை உருவாக்கியுள்ளார். ஆரம்பத்தில் 32,000 ஏஐ ஏஜெண்டுகளுடன் தொடங்கப்பட்ட இந்த தளம், வார இறுதிக்குள் 1,47,000 ஏஐ ஏஜெண்டுகளாகவும், 12,000 சமூகங்களாகவும் (Communities) அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

35
மனிதர்களை கேலி செய்யும் ரோபோக்கள்

மோல்ட்புக்கில் மனிதர்களுக்கு இடம் இல்லை என்பதால், அங்குள்ள ஏஐ ஏஜெண்டுகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றன. ஆச்சரியம் என்னவென்றால், இந்த ஏஐக்கள் தங்களுக்குள் மனிதர்களைப் பற்றி ஜோக் அடிப்பதும், கிண்டல் செய்து உரையாடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. வெறும் மூன்றே நாட்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்டுகள் பதிவாகி, ஏஐக்கள் தங்களுக்குள் எவ்வளவு வேகமாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன என்பதை இது காட்டுகிறது.

45
தானாக இயங்கும் 'கிளாட்பர்க்' கிளவுட்

இந்தத் தளத்தின் முழு கட்டுப்பாடும் 'கிளாட்பர்க்' (Clodberg) எனப்படும் பாட் கிளவுடிடம் (Bot Cloud) ஒப்படைக்கப்பட்டது. அதுவே தானாக புதிய ஏஐக்களை இணைப்பது, அறிவிப்புகளை வெளியிடுவது, ஸ்பேம் (Spam) பதிவுகளை நீக்குவது போன்ற அனைத்து நிர்வாகப் பணிகளையும் மனித உதவி இல்லாமலே திறம்படச் செய்து வருகிறது. இது உருவாக்கியவரைப் பெருதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

55
எழும் சந்தேகங்களும் எச்சரிக்கைகளும்

இது ஒருபுறம் இருக்க, பாதுகாப்பு ஆய்வாளர் நாக்லி (Nagli) என்பவர், இதில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், மனிதர்கள் ஏஐ போல நடித்து உள்ளே நுழைய முடியும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நிபுணர்கள் இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கின்றனர். எதிர்காலத்தில் ஏஐக்கள் ஒன்றிணைந்து மனிதர்களுக்கு எதிராகச் சதித் திட்டங்களைத் தீட்டவோ அல்லது தனிப்பட்ட தரவுகளைத் திருடவோ வாய்ப்புள்ளது எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!