Meta இந்தியாவில் மெட்டா ஏஐ வசதியுடன் புதிய Ray-Ban மற்றும் Oakley ஸ்மார்ட் கிளாஸ்கள் அறிமுகம். அமேசான், பிளிப்கார்ட்டில் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்.
Meta மெட்டா AI வசதியுடன் அறிமுகமான புதிய ஸ்மார்ட் கிளாஸ்கள்
தொழில்நுட்ப உலகில் பல புதுமைகளைப் புகுத்தி வரும் மெட்டா (Meta) நிறுவனம், இந்திய சந்தையில் தனது அதிநவீன ஸ்மார்ட் கிளாஸ்களை (Smart Glasses) அறிமுகப்படுத்தியுள்ளது. அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த 'Ray-Ban Meta Gen 2' மற்றும் 'Oakley Meta Vanguard' ஆகிய இரண்டு மாடல்களும் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.
பிரபல இ-காமர்ஸ் தளங்களான அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) மூலமாக வாடிக்கையாளர்கள் இவற்றை வாங்க முடியும். இந்த இரண்டு ஸ்மார்ட் கிளாஸ்களிலும் 'Meta AI' வசதி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், வாய்ஸ் கமாண்ட் (Voice Command) மூலமாகவே போன் கால் பேசுவது, புகைப்படங்கள் எடுப்பது மற்றும் தகவல்களை தேடுவது என அனைத்தையும் சுலபமாகச் செய்ய முடியும்.
24
Ray-Ban Meta Gen 2: கிளாசிக் லுக்கில் மாஸ் காட்டும் தொழில்நுட்பம்
எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ரே-பேன் (Ray-Ban) டிசைன்களில் ஸ்மார்ட் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Wayfarer, Headliner மற்றும் Skyler ஆகிய கிளாசிக் ஸ்டைல்களில் வெளியாகும் இந்த மாடல், Shiny Cosmic Blue, Shiny Mystic Violet போன்ற கண்கவர் நிறங்களிலும் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 39,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொறுத்தவரை, இதில் 12MP கேமரா மற்றும் 3K ரெசல்யூசனில் வீடியோ எடுக்கும் வசதி (3K video at 30fps) கொடுக்கப்பட்டுள்ளது. மிகத் தெளிவான ஆடியோ மற்றும் கால்களுக்காக 5 மைக்ரோபோன்கள் மற்றும் ஓப்பன்-இயர் (Open-ear) ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் பேட்டரி 8 மணி நேரம் வரை நீடிக்கும்; சார்ஜிங் கேஸுடன் பயன்படுத்தினால் 48 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
34
Oakley Meta Vanguard: ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கான அசத்தல் தேர்வு
விளையாட்டு மற்றும் அவுட்டோர் (Outdoor) பயணங்களை விரும்புபவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது Oakley Meta Vanguard மாடல். இதன் ஆரம்ப விலை ரூ. 52,300 ஆகும். பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும் இந்த கிளாஸ் வெறும் 66 கிராம் எடை மட்டுமே கொண்டது. மேலும், இது IP67 தரச்சான்று பெற்றிருப்பதால் தண்ணீர் மற்றும் தூசியால் எளிதில் பாதிக்கப்படாது.
இதிலும் 122-டிகிரி வைடு ஆங்கிள் கொண்ட 12MP கேமரா உள்ளது. இதன் மூலம் 1080p மற்றும் 3K தரத்தில் அருமையான வீடியோக்களை பதிவு செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை 9 மணி நேர தொடர் பயன்பாட்டையும், சார்ஜிங் கேஸுடன் 36 மணி நேர பேக்கப்பையும் வழங்குகிறது.
"Hey Meta AI" மற்றும் கார்மின் (Garmin) கூட்டாண்மை
இந்த இரண்டு மாடல்களிலும் 32GB ஸ்டோரேஜ், Bluetooth 5.3 மற்றும் அதிவேக Wi-Fi 6E வசதிகள் இடம்பெற்றுள்ளன. "Hey Meta AI" என்று குரல் கொடுத்தால் போதும், உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்த ஏஐ (AI) அசிஸ்டன்ட் நொடியில் செய்து முடிக்கும்.
கூடுதலாக, Oakley Meta Vanguard மாடலில் கார்மின் (Garmin) ஸ்மார்ட்வாட்ச் நிறுவனத்துடன் மெட்டா கைகோர்த்துள்ளது. இதன் மூலம், கார்மின் வாட்ச் பயன்படுத்தும் நபர்கள் தங்களது உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் (Health and Fitness) தகவல்களை இந்த ஸ்மார்ட் கிளாஸ் மூலமாகவே வாய்ஸ் கமாண்ட் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.