ஆண்ட்ராய்டுக்கு ஓகே.. ஐபோனுக்கு செக்! திடீரென முடங்கிய WhatsApp Web - கடுப்பில் யூசர்கள்!

Published : Feb 28, 2026, 12:23 PM IST

WhatsApp ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் வெப் சேவையில் லாகின் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சேவை சீராக உள்ளது. முழு விவரம் உள்ளே.கடுப்பில் யூசர்கள்!

PREV
13
WhatsApp வாட்ஸ்அப் வெப் முடக்கம்: லாகின் செய்வதில் தொடரும் சிக்கல்

உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), இன்று காலை முதல் சில தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கணினிகளில் பயன்படுத்தப்படும் 'வாட்ஸ்அப் வெப்' (WhatsApp Web) சேவையில் பயனர்கள் தங்களது கணக்கை லாகின் (Login) செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இணையதள சேவைகளின் முடக்கத்தைக் கண்காணிக்கும் 'டவுன்டிடெக்டர்' (Downdetector) தளத்தில், பல பயனர்கள் இது குறித்து தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். அதன்படி, 56 சதவீத பயனர்கள் வாட்ஸ்அப் வெப் இணையதளத்திலும், 39 சதவீத பயனர்கள் மொபைல் ஆப்பிலும், 6 சதவீத பயனர்கள் மெசேஜ் அனுப்புவதிலும் சிக்கல்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

23
ஐபோன் பயனர்களை அதிகம் பாதித்த தொழில்நுட்பக் கோளாறு

இந்த பிரச்சனை அனைத்து பயனர்களுக்கும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ்அப் வெப் எந்தவித தடையுமின்றி சீராகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், ஐபோன் (iPhone) பயனர்கள் தங்களது மொபைலில் இருந்து க்யூஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்து வெப் வெர்ஷனில் லாகின் செய்யும்போது பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

தொடர்ச்சியாக லாகின் எரர் (Login Error) வருவதால், அலுவலகப் பணிகளுக்காக வாட்ஸ்அப் வெப்பை நம்பியிருப்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல பயனர்கள், "எனக்கு மட்டும்தான் இந்த பிரச்சனையா அல்லது அனைவருக்கும் வாட்ஸ்அப் முடங்கியுள்ளதா?" என்று கேள்வியெழுப்பி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

33
மெட்டா நிறுவனத்தின் மௌனம் தொடர்கிறது

டவுன்டிடெக்டர் தரவுகளின்படி, இன்று காலை 8:37 மணி முதலே இந்த லாகின் பிரச்சனை தொடங்கிவிட்டது. நீண்ட நேரமாகியும் ஐபோன் பயனர்களால் வாட்ஸ்அப் வெப்பை தங்கள் சாதனங்களில் இணைக்க (Link Devices) முடியவில்லை. பல மணி நேரமாக இந்தப் பிரச்சனை தொடர்ந்த போதிலும், இது உலகளாவிய முடக்கமா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மேலும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து வாட்ஸ்அப் நிறுவனமோ அல்லது அதன் தாய் நிறுவனமான மெட்டாவோ (Meta) இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. இந்த பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என பயனர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories