ஐபோன் 18 எப்போது வெளியாகும்? நவம்பரில் தொடங்கும் மெகா தயாரிப்பு. ஆப்பிளின் A20 சிப்செட், 9GB RAM மற்றும் புதிய சிறப்பம்சங்களுடன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ள ஐபோன் 18 மாடலின் முழு விவரங்கள் என்ன?
ஆப்பிள் பிரியர்களுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது. வழக்கமாக அனைத்து மாடல்களையும் ஒன்றாகக் களமிறக்கும் தனது பல ஆண்டுக்கால வழக்கத்தை உடைத்தெறிந்து, பேசிக் மாடலான ஐபோன் 18-ஐ நிறுத்தி வைத்துவிட்டு, அதற்கு முன்பாகவே ஐபோன் 18 புரோ, ஐபோன் 18 புரோ மேக்ஸ் மற்றும் தனது முதல் மடிக்கக்கூடிய போன் ஐபோன் டூயோ (iPhone Duo) ஆகியவற்றை கடந்த மாதம் நடந்த Surprise and Shine விழாவில் அறிமுகப்படுத்தி டெக் உலகையே அதிரவைத்தது ஆப்பிள் நிறுவனம்.
புரோ மாடல்கள் சந்தையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில், சாமானிய ஆப்பிள் ரசிகர்களின் ஒற்றைக் கேள்வி: "எங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சாதாரண ஐபோன் 18 எப்போது வரும்?" என்பதுதான். ஆப்பிள் நிறுவனம் இதுபற்றி மூச்சுக்கூட விடாத நிலையில், தற்போது அதன் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு தேதி குறித்த சுடச்சுட ரகசியத் தகவல்கள் கசிந்துள்ளன!
24
நவம்பரில் தொடங்கும் பிரம்மாண்ட உற்பத்தி!
சீனாவின் பிரபல சமூக வலைதளமான வெய்போவில் டிப்ஸ்டர் 'Fixed Focus Digital' வெளியிட்டுள்ள கசிவின்படி, ஐபோன் 18 மாடலின் உற்பத்தி நவம்பர் மாதத்தில் முழு வீச்சில் தொடங்கவுள்ளது. ஆப்பிளின் உதிரிபாகக் கையிருப்பு நிலவரங்களை ஆராய்ந்தபோது, நிறுவனம் இந்த முறை மிகப்பெரிய அளவில் போன்களை இருப்பு வைக்கத் திட்டமிட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. அதாவது, போன் சந்தைக்கு வரும் முதல் நாளிலேயே விற்பனை வரலாறு காணாத அளவுக்கு எகிறும் என டிம் குக் தலைமையிலான குழு அதீத நம்பிக்கையில் உள்ளது. வழக்கமாகவே அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்குச் சில மாதங்களுக்கு முன்பே ஆப்பிள் உற்பத்தியைத் தொடங்குவது வழக்கம் என்பதால், இந்தத் தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
34
எப்போது கைகளில் கிடைக்கும்? என்னென்ன அம்சங்கள்?
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபோன் 18 அதிகாரப்பூர்வமாகச் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு நில்லாமல், பட்ஜெட் பிரியர்களுக்காக 'ஐபோன் 18e' (iPhone 18e) என்ற மற்றொரு மாடலும் இதனுடன் சேர்த்தே அறிமுகமாகவுள்ளது. இந்த 2 மாடல்களிலும் எதிர்பார்க்கப்படும் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஆப்பிளின் அடுத்த தலைமுறை அதிவேக A20 சிப் இடம்பெறுகிறது. மொபைலிலேயே எந்தத் தடையுமின்றி செயல்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (On-device AI) திறன்களைத் தாங்குவதற்காக முதல்முறையாக 9GB RAM தரப்படவுள்ளது. ஐபோன் 18 மாடல் 6.3 அங்குலத் திரையுடன் வரவுள்ளது. பின்புறத்தில் சக்திவாய்ந்த இரட்டை கேமரா (Dual rear camera) அமைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தையில் கலக்கிக் கொண்டிருக்கும் புரோ மாடல்களின் நிலவரம் என்ன? ஐபோன் 18 புரோ (256GB) தொடக்க விலை ரூ.1,64,900; அதே 256GB கொண்ட ஐபோன் 18 புரோ மேக்ஸ் விலை ரூ.1,79,900. புரோ மாடல் 6.3 அங்குலத் திரையையும், புரோ மேக்ஸ் மாடல் 6.9 அங்குல பிரம்மாண்டத் திரையையும் கொண்டுள்ளன. இவை இரண்டிலும் உச்சகட்ட வேகம்கொண்ட A20 Pro சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஒளியை அற்புதமாக கட்டுப்படுத்தும் வேரியபிள் அப்பேச்சர் (Variable Aperture) கொண்ட 48MP பியூஷன் மெயின் கேமரா உட்பட 3 கேமராக்கள் இதில் உள்ளன. ஆப்பிளின் இந்த அதிரடி மாற்றத்தால், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வரவிருக்கும் அடிப்படை ஐபோன் 18 மீதான எதிர்பார்ப்பு இப்போதே விண்ணைத் தொட்டுள்ளது!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.