நாம் அன்றாடம் பயன்படுத்தும் மடிக்கணினி என்ற லேப்டாப் சில சமயங்களில் பிரச்சனைக்கு உள்ளாவது உண்டு. சில சமயங்களில் சார்ஜ் ஆகாமல் இருக்கும். இதற்குப் பின்னால் சில காரணங்கள் இருக்கலாம். அதைச் சரிசெய்ய உங்கள் மடிக்கணினியை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, நீங்கள் சரிபார்க்க வேண்டிய 5 விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
பவர் அடாப்டரைச் சொருகி, சுவிட்சை சரியாக போட்டுள்ளோமோ என்று முதலில் சரி பாருங்கள். இரண்டாவதாக, லேப்டாப்பின் சார்ஜிங் போர்ட்டில் சார்ஜிங் பின்னை சொருகி இருக்கிறோமா ? என்று சரி பாருங்கள்.
மடிக்கணினி முழுமையாக அல்லது சரியாக சார்ஜ் செய்யாததற்கு சார்ஜிங் போர்ட் காரணமாக இருக்கலாம். போர்ட்டில் அழுக்கு இருக்கிறதா என்று சோதிக்கவும்.
காலப்போக்கில் பேட்டரி சிதைவடைய வாய்ப்பு உண்டு. உங்கள் மடிக்கணினி ஓரிரு வருடங்கள் பழையதாக இருந்தால், பேட்டரி சார்ஜ் செய்ய முடியாத அளவுக்கு சிதைந்திருக்கலாம். சிறந்த கம்பெனி பேட்டரியாக மாற்றவும்.