ஜியோ சிம் வச்சிருக்கீங்களா? டேட்டாவை வாரி வழங்கும் பிளான்கள்; 84 நாள் வேலிடிட்டி; மிஸ் பண்ணாதீங்க!

First Published | Jan 20, 2025, 4:05 PM IST

செல்போன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கும் ஜியோ, மொத்தமாக டேட்டா வழங்கும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அது குறித்து பார்க்கலாம். 

JIO Recharge Plan

ஜியோ ரீசார்ஜ் பிளான்கள் 

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க போட்டி போட்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. 

அதிலும் சலுகைகளை வாரி வழங்குவதில் ஜியோ முன்னிலையில் உள்ளது. சுமார் 490 மில்லியன் வாடிக்கையாளர் தளத்தை கொண்டுள்ள ஜியோ மலிவு விலையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ சிம்மைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதிக டேட்டா தேவைப்பட்டால் அதற்கு ஏற்ற வகையில் அதிக வேலிடிட்டியுடன் டேட்டாக்களை வாரி வழங்கும் திட்டங்கள் ஜியோவிடம் உள்ளன. அந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

JIO Data Plan

மொத்தமாக டேட்டா 

ஜியோவின் ரூ.1028 திட்டம்: இந்தத் திட்டம் 84 நாட்கள் வேலிட்டி வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 168 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதனுடன், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மூலம் நீங்கள் பயனடையலாம். 

ஜியோ ரூ.1049 திட்டம்: 84 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் இந்தத் திட்டம் உங்களுக்கு 168 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 2 ஜிபி வரை அதிவேக டேட்டாவை அளிக்கிறது. 

ஜியோ ரூ.1029 திட்டம்: 84 நாள் வேலிடிட்டியுடன் 168 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. மேலும் அமேசான் பிரைம் லைட்டுக்கான இலவச சந்தாவையும் பெறலாம். 

ரூ.40,000க்குள் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்! அப்பப்பா! இத்தனை சிறப்பம்சங்களா?


JIO Budget Plans

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா 

ஜியோ ரூ.999 திட்டம்: இந்த ட்ரூ 5ஜி திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. மொத்தம் 196 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது வேலிட்டியுடன் ஒப்பிடும்போது இரு மடங்காகும். நீங்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

ரூ.949 திட்டம்: 84 நாட்கள் வேலிட்டிட்டி கொண்ட இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 168 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மேலும் இலவச அழைப்புடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவையும் பெற்றுக் கொள்ள முடியும்.

ரூ.899 திட்டம்: 90 நாட்களுக்கு வேலிட்டியுடன் தினமும் 2 ஜிபி டேட்டாவையும் கூடுதலாக 20 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது, மொத்தம் 200 ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும்.
 

JIO LowCost Plans

தினமும் 2 ஜிபி டேட்டா 

ரூ.719 திட்டம்: இந்த திட்டம் 70 நாட்கள் வேலிட்டி கொடுக்கும். இந்த திட்டத்தில் 140 ஜிபி டேட்டாவும் அடங்கும், இது ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக இது ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான இலவச சந்தாக்களையும் வழங்குகிறது.

ரூ.349 திட்டம்: இரட்டை டேட்டாவுடன் மிகவும் மலிவு விலையில் மாதாந்திர விருப்பமாக, இந்த திட்டம் 28 நாட்களுக்கு 56 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் ஜியோ சினிமாவிற்கான இலவச சந்தாவையும் பெறலாம்.

பயனாளர்களின் பொன்னான திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் ஜியோ: 200 நாள் பிளான் குளோஸ்

Latest Videos

click me!