IPL ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்.. JioHotstar சந்தாவுடன் அன்லிமிடெட் 5G டேட்டா.. முழு விவரம்!

Published : Apr 30, 2026, 09:05 PM IST

நீங்கள் ஜியோஹாட்ஸ்டாரில் ஒவ்வொரு மேட்ச்சையும் தடையின்றி லைவ்வாக பார்க்க விரும்பினால், ஜியோ ஒரு சூப்பரான ஆஃபரை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக காண்போம்.

PREV
14
களைகட்டும் ஐபிஎல் தொடர்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா களைகட்டியுள்ளது. தினம்தோறும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் போட்டிகள் சென்று கொண்டிருக்கின்றன. ஐபிஎல் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஐபிஎல் போட்டிகளை நேரலையில் பார்க்க ஜியோஹாட்ஸ்டாரில் சந்தா செலுத்த வேண்டும்.

24
ஜியோவின் சூப்பர் பிளான்

நீங்களும் ஒவ்வொரு மேட்ச்சையும் தடையின்றி லைவ்வாக பார்க்க விரும்பினால், ஜியோ ஒரு சூப்பரான ஆஃபரை கொண்டு வந்துள்ளது. இந்த பிளானில் ரீசார்ஜ் டென்ஷன் இல்லாமல், முழுமையான என்டர்டெயின்மென்ட் கிடைக்கும். அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் டென்ஷனில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு, ஜியோவின் ரூ.949 பிளான் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பிளானில் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், 84 நாட்களுக்கு (சுமார் 3 மாதங்கள்) மீண்டும் பணம் செலவழிக்கத் தேவையில்லை.

இந்த ₹949 பிளானில் உங்களுக்கு தினமும் 2GB அதிவேக டேட்டா கிடைக்கும். அதாவது, 84 நாட்களில் மொத்தம் 168GB டேட்டா. இது வீடியோ பார்ப்பதற்கும், சோஷியல் மீடியா பயன்படுத்துவதற்கும் போதுமானது. மேலும், இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் பேசலாம். ரோமிங் கட்டணமும் கிடையாது.

34
அதிக ஓடிடி பலன்கள்

இந்த பிளானின் மிகப்பெரிய சிறப்பம்சமே இதன் OTT பலன்தான். ஜியோ இதில் உங்களுக்கு 3 மாத JioHotstar சந்தாவை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம், நீங்கள் IPL 2026-ன் அனைத்து போட்டிகளையும், புதிய வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களையும் உங்கள் போனில் எங்கிருந்தும் பார்க்கலாம். இதனுடன், ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சேவைகளும் இலவசமாகக் கிடைக்கும். உங்களிடம் 5G ஸ்மார்ட்போன் இருந்து, உங்கள் பகுதியில் ஜியோவின் 5G நெட்வொர்க் கிடைத்தால், உங்களுக்கு கொண்டாட்டம்தான். இந்த பிளானுடன் உங்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா கிடைக்கும். நீங்கள் மேட்ச் பார்த்தாலும் சரி, பெரிய ஃபைல்களை டவுன்லோட் செய்தாலும் சரி, டேட்டா தீர்ந்துவிடும் என்ற கவலையே வேண்டாம்.

44
வேறு பட்ஜெட் பிளான்களும் உள்ளன

நீங்கள் ரூ.949 பெரிய ரீசார்ஜ் செய்ய விரும்பவில்லை என்றால், ஜியோவிடம் ஒரு சிறிய ஆனால் பவர்ஃபுல் ஆப்ஷன் உள்ளது. அதுதான் ரூ.149 கிரிக்கெட் டேட்டா பேக். இதில் உங்களுக்கு 30 நாட்களுக்கு 10GB கூடுதல் டேட்டா கிடைக்கும். இதன் சிறப்பம்சமே, இந்த சிறிய பேக்கிலும் உங்களுக்கு 3 மாத JioHotstar இலவசமாகக் கிடைப்பதுதான். ஏற்கனவே சிறிய ரீசார்ஜ் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதேபோல் இன்னும் அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்காக ஜியோவில் ரூ.195 பிளான் ஒன்றும் உள்ளது. இதில் 30 நாட்களுக்கு 15GB அதிவேக டேட்டா கிடைக்கும். இதிலும் 3 மாத JioHotstar Mobile சந்தா இலவசமாகக் கிடைக்கும். அதிக நேரம் மேட்ச் பார்ப்பவர்களுக்கு இது ரூ.149-ஐ விட சிறந்த தேர்வாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories