Telecom Shock: இனி ஃப்ரீ 5G கிடையாது? ரீசார்ஜ் கட்டணத்தை 15% உயர்த்தும் ஜியோ, ஏர்டெல்!

Published : Jul 07, 2026, 05:43 PM IST

Telecom Shock: ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை 15% வரை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் இலவச 5G சேவையையும் நிறுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

PREV
14
ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் செல்போன் நிறுவனங்கள்

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் ஏற்கனவே அதிகமாக இருப்பதாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அடுத்த சில மாதங்களில், மொபைல் பயனர்களின் மாதாந்திர செலவு இன்னும் அதிகரிக்கப் போகிறது. 'சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச்' என்ற புரோக்கரேஜ் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 3 முதல் 4 மாதங்களில் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் சுமார் 12 முதல் 15 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: Best 5G Phones Under 10,000: தரமான டிஸ்பிளே, கேமரா & பேட்டரி கொண்ட டாப் 5G போன்கள்!

24
ஜியோ, ஏர்டெல், வோடோபோன்

அதன்படி, அடுத்த 3 முதல் 4 மாதங்களில் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் சுமார் 12 முதல் 15 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. தற்போது சந்தையில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் என விரல் விட்டு எண்ணக்கூடிய சில டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இதனால், ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவது அந்த நிறுவனங்களுக்கு எளிதாகிவிட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்திய மொபைல் சந்தையில் இப்போது ஜியோ, ஏர்டெல், Vi மற்றும் BSNL ஆகிய நிறுவனங்கள் மட்டுமே முக்கியப் போட்டியாளர்களாக உள்ளன. சந்தையில் போட்டி குறைந்ததால், இந்த நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரு நல்ல சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: Best Selling iPhone: ஆப்பிள் வரலாற்றிலேயே அதிகம் விற்ற போன் இதுதான்.. எது தெரியுமா?

34
15% வரை உயரும் ரீசார்ஜ் கட்டணங்கள்

இதைப் பயன்படுத்தி, தங்களின் டேரிஃப் பிளான்கள், அதாவது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளர்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் சுமை ஏற்படும். கடந்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் இன்டர்நெட் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளது. 4G மற்றும் 5G சேவைகள் சிறு கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிக டேட்டாவைப் பயன்படுத்துகின்றனர்.

44
இனி ஃப்ரீ 5G' கிடையாது?

இதுவும் கட்டண உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மறுபுறம், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் நாட்டின் 90 சதவீதத்திற்கும் அதிகமான மாவட்டங்களில் 5G சேவையைத் தொடங்கியுள்ளன. அதிகமான மக்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவை கிடைப்பதால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், அதற்கான விலையும் அதிகரித்து வருகிறது.

அதிவேக இன்டர்நெட் சேவை கிடைப்பதால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவற்றுடன், இதுவரை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களின் உயர்தர பிளான்களில் வழங்கி வந்த 'இலவச அன்லிமிட்டெட் 5G' சலுகையையும் இந்த கட்டண உயர்வின் போது திரும்பப் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இனி 5G டேட்டாவைப் பயன்படுத்த தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை வரலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories