ஐபோன் 16 ப்ளஸ்-ல் 6.7 இன்ச் Super Retina XDR OLED டிஸ்ப்ளே, A18 சிப் செட், Apple Intelligence வசதி, 48MP மேயின் கேமரா, 12MP அல்ட்ரா-வைட் மற்றும் 12MP செல்ஃபி கேமரா ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் IP68 நீர் மற்றும் தூசி பாதுகாப்பும் உள்ளது. iPhone 16 128GB மாடல் இந்தியாவில் ரூ.79,900 விலையில் அறிமுகமானது. மேலும் ஐபோன் 16 ப்ளஸ் 128GB மாடல் ரூ.89,999 விலையில் வெளியிடப்பட்டது. ஆனால் iPhone 17 தொடர் வந்த பிறகு, 16 Plus மாடலில் விலை குறைந்துள்ளது. தற்போது கிடைக்கும் இந்த தள்ளுபடியைப் பயன்படுத்தி, பிரீமியம் ஐபோன் வாங்குவதற்கு இது மிகச் சிறந்த நேரம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.