இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reels) மோகம் உலகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. வீடியோ கிரியேட்டர்களின் வேலையை எளிதாக்க, இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது தனித்துவமான வீடியோ எடிட்டிங் செயலியான "எடிட்ஸ்" (Edits) ஆப்பில் மிகப்பெரிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. புதிய டெம்ப்ளேட்கள், ஸ்டோரிபோர்டுகள் மற்றும் ஐபோன் பயனர்களுக்கான விட்ஜெட்கள் எனப் பல அட்டகாசமான வசதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய டெம்ப்ளேட்கள் மற்றும் ஸ்டோரிபோர்டுகள்
வீடியோ எடிட்டிங் தெரியாதவர்கள் கூட இனி ஈஸியாக வீடியோ செய்யலாம். டிரெண்டிங்கில் உள்ள பாடல்கள், பலவிதமான எழுத்துருக்கள் (Fonts) மற்றும் கிளிப்களை ஒன்றிணைத்து, ரெடிமேட் ஆக இருக்கும் 'டெம்ப்ளேட்களை' (Templates) இதில் அறிமுகப்படுத்தியுள்ளனர். பயனர்கள் தாங்கள் உருவாக்கிய டெம்ப்ளேட்களையும் மற்றவர்களுடன் பகிர முடியும். இது கிரியேட்டர்களிடையேயான கூட்டு முயற்சியை அதிகரிக்கும். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த வசதி தற்போது கிடைக்கிறது.