Social Media பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களுக்கு இனி KYC கட்டாயமா? போலி கணக்குகளை ஒழிக்க மத்திய அரசு அதிரடி திட்டம்! இனி உங்க ஒரிஜினல் ஐடி இருந்தாதான் லாகின் செய்ய முடியும்
இணையதளப் பயன்பாடு அதிகரித்துள்ள அதே வேளையில், போலி கணக்குகள் (Fake Accounts) மூலம் நடக்கும் சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனைத் தடுக்க இந்திய அரசு ஒரு அதிரடி முடிவை எடுக்க ஆலோசித்து வருகிறது. இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (X) மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளக் கணக்குகளைத் தொடங்க 'கேஒய்சி' (KYC - Know Your Customer) சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம்.
இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், வங்கி கணக்கு தொடங்குவது அல்லது சிம் கார்டு வாங்குவது போலவே, உங்கள் அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பித்த பின்னரே சமூக வலைதளக் கணக்குகளைப் பயன்படுத்த முடியும்.
25
ஏன் இந்த அதிரடி முடிவு?
நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போலி அடையாளங்களைப் பயன்படுத்திப் பெண்களைத் துன்புறுத்துவது (Cyberstalking), ஆள்மாறாட்டம் செய்வது மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் தற்போது சவாலாக உள்ளன. குற்றவாளிகள் பெரும்பாலும் போலி கணக்குகளுக்குப் பின்னால் மறைந்து கொள்வதால், அவர்களைக் கண்டுபிடிப்பதில் காவல்துறைக்குச் சிக்கல் நீடிக்கிறது.
KYC முறை அறிமுகமானால், ஒவ்வொரு கணக்கும் ஒரு உண்மையான நபரோடு இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை மிக எளிதாகக் கண்டறிய முடியும்.
35
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை
சமூக வலைதளங்களில் பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்துவது மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கேமிங் தளங்கள் மற்றும் டேட்டிங் ஆப்ஸ்களிலும் (Dating Apps) இந்த KYC முறையைக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வயது வரம்புகளைக் (Age Limits) கண்காணிக்கவும், மைனர் சிறுவர்கள் தேவையற்ற தளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் முடியும்.
சமூக வலைதளங்கள் மட்டுமின்றி, ஆன்லைன் கேமிங் மற்றும் டேட்டிங் தளங்களிலும் போலி கணக்குகளால் பல மோசடிகள் நடக்கின்றன. அங்கும் முறையான அடையாளச் சான்றுகளைக் கட்டாயமாக்குவதன் மூலம் ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்க முடியும் என அரசு நம்புகிறது.
55
திட்டம் தனிநபர் உரிமை
இருப்பினும், இந்தத் திட்டம் தனிநபர் உரிமை (Privacy) மற்றும் தரவு பாதுகாப்பு (Data Protection) தொடர்பான விவாதங்களையும் கிளப்பியுள்ளது. அரசு இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது என்பதும், மக்களின் தரவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதும் குறித்த விரிவான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.