கேபிளே வேண்டாம்.. ஒரே நேரத்தில் 4 பவர் பேங்க்.. ரூ.1699-க்கு தர்றாங்க.!!

Published : Mar 25, 2026, 11:51 AM IST

ஜஸ்ட் கோர்செகா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்பார்க்வோல்ட் பவர் பேங்க் சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய பில்ட்-இன் கேபிள்கள் போன்ற அம்சங்களுடன் நான்கு புதிய மாடல்கள் வந்துள்ளன.

PREV
14
ஜஸ்ட் கோர்செகா பவர் பேங்க்

ஜஸ்ட் கோர்செகா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்பார்க்வோல்ட் பவர் பேங்க் சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வரிசையில் ஒரே நேரத்தில் நான்கு பவர் பேங்க் மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. MagSafe வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் வசதிகளுடன் வந்துள்ள இவை, பல சாதனங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் பயனர்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பவர் பேங்க்-களின் விலை வரிசையும் மாறுபடுகிறது. ஸ்பார்க்வோல்ட் JST524 மாடல் ரூ.2,999 ஆகவும், JST530 ரூ.1,699, JST532 ரூ.2,099 மற்றும் JST534 ரூ.2,199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

24
கேபிள் தேவையில்லை

இவை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகள் மூலம் வாங்கலாம். ஸ்பார்க்வோல்ட் சீரிஸின் முக்கிய அம்சம் மல்டி டிவைஸ் சார்ஜிங் ஆகும். இதில் டைப்-சி மற்றும் Lightning build-in cables உள்ளன. அதோடு ஐவாட்ச் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தனியாக கேபிள் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், எளிதாக பல சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.

34
வேகமாக சார்ஜிங் வசதி

இந்த வரிசையில் மிக சக்திவாய்ந்த மாடல் JST524 ஆகும். இதில் 20,000mAh பேட்டரி மற்றும் 45W வேகமாக சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களை வேகமாக சார்ஜ் செய்ய இது உதவும். மற்ற மாடல்கள் 10,000mAh பேட்டரியுடன் 22.5W வேகமாக சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.

44
பிரீமியம் ஃபேப்ரிக் ஃபினிஷ்

மேலும், சில மாடல்களில் பிரீமியம் ஃபேப்ரிக் ஃபினிஷ், ஆன்டி-ஸ்லிப் டிசைன், ஸ்மார்ட் டிஜிட்டல் டிஸ்ப்ளே, காந்த சார்ஜிங், மடிக்கக்கூடிய ஸ்டாண்ட் மற்றும் ஃபோன் ஹோல்டர் போன்ற கூடுதல் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பவர் பேங்க்ஸ் ஆனது சாதாரண சார்ஜிங் சாதனமாக இல்லாமல், ஸ்டைலும் வசதியும் இணைந்த புதிய தேர்வாக மாறுகின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories