வாட்ஸ்அப்பில் உங்களது மொபைல் எண் பிளாக் செய்யப்பட்டு இருப்பதை எப்படி அறிவது?

First Published | Sep 4, 2024, 2:26 PM IST

வாட்ஸ்அப்பில் உங்களை யாராவது பிளாக் செய்துள்ளார்களா என்பதை எப்படி அறிந்து கொள்வது என்று பார்க்கலாம். 

Whatsapp Update

தொடர்ச்சியான ஒரே செய்தியை பார்வார்டு செய்வது, வர்த்தக செய்திகள், பிடிக்காத செய்திகளை அனுப்புவது போன்ற காரணங்களால் சிலரை வாட்ஸ்அப்பில் பிளாக் செய்கிறார்கள். சில சமயங்களில் கோபத்தில் சிலரின் எண்ணை வாட்ஸ்அப்பில் பிளாக் செய்கிறார்கள். பிளாக் செய்யப்பட்டுள்ளது என்று வாட்ஸ்அப்பில் அறிவிப்பு அனுப்புவதில்லை. 

Whatsapp Update

வாட்ஸ்அப்பில் யாராவது உங்களை பிளாக் செய்துள்ளார்களா என்பதை அறிய சில வழிகள் உள்ளன. வாட்ஸ்அப் வழங்கும் சில அறிகுறிகளால் இதை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.  

Tap to resize

Profile Photo

வாட்ஸ்அப் Profile Photo புதுப்பிக்கப்படவில்லை என்றால் உங்கள் எண் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். மேலும் பல நாட்களாக உங்களுக்கு அந்த நபர் குறித்த தகவல்களை காட்டவில்லை என்றால் அல்லது அப்டேட் ஆகவில்லை என்றால் கடைசியாகப் பார்த்தது கூட காட்டவில்லை என்றால் உங்கள் எண் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். 

Blocked Whatsapp

வாட்ஸ்அப் மூலம் ஒருவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும் உங்களது எண்ணை பிளாக் செய்திருக்கலாம். பல நாட்கள் முயற்சித்தும் வாட்ஸ்அப் அழைப்பு இணைக்கப்படவில்லை என்றால் எண் பிளாக் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பைக் காட்டுகிறது. 

Whatsapp

வாட்ஸ்அப் குழுவில் நீங்கள் நிர்வாகியாக இருந்தாலும், சில எண்களை குழுவில் சேர்க்க முடியவில்லை என்றால் அவர் உங்கள் எண்ணை பிளாக் செய்திருக்கலாம். குழுவில் சேர்க்கும்போது எண் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தாலும் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம்.

Whatsapp Blocked

இவை வாட்ஸ்அப் வழங்கும் சில குறிப்புகள் மட்டுமே. இந்த குறிப்புகள் மூலம் எண் பிளாக் தகவலை ஓரளவு அறியலாம். ஆனால் இது துல்லியமான தகவல் அல்ல. வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கையின்படி, யார் எண்ணை பிளாக் செய்துள்ளார்கள் என்ற எந்தத் தகவலையும் வாட்ஸ்அப் வழங்காது.

Latest Videos

click me!