கம்மி விலையில் பெஸ்டு பவர் பேங்க்! பேட்டரி தீர்ந்துபோகும் பிரச்சினையே இருக்காது!!

Published : Sep 04, 2024, 12:27 PM ISTUpdated : Sep 04, 2024, 12:30 PM IST

இன்று கிட்டத்தட்ட அனைவரும் கேஜெட்களை சார்ந்திருப்பதால், பவர் பேங்க் பயன்படுத்துவதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. பயணத்தின் போதும், மின்சார வெட்டு நேரங்களிலும் எலக்ட்ரானிக் கேஜெட்களை ரீசார்ஜ் பவர் பேங்க் கைகொடுக்கும்.

PREV
111
கம்மி விலையில் பெஸ்டு பவர் பேங்க்! பேட்டரி தீர்ந்துபோகும் பிரச்சினையே இருக்காது!!
Best Power Banks

இன்று கிட்டத்தட்ட அனைவரும் கேஜெட்களை சார்ந்திருப்பதால், பவர் பேங்க் பயன்படுத்துவதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. பயணத்தின் போதும், மின்சார வெட்டு நேரங்களிலும் எலக்ட்ரானிக் கேஜெட்களை ரீசார்ஜ் பவர் பேங்க் கைகொடுக்கும்.

211
Power Banks 2024

ஸ்மார்ட்போன்கள் முதல் லேப்டாப்கள் வரை பலவிதமான கேஜெட்களை சார்ஜ் செய்ய இதனை பயன்படுத்தலாம். பவர் பேங்க் கைவசம் வைத்திருந்தால், எப்போதும் உங்கள் அத்தியாவசிய கேஜெட்கள் ஆஃப் ஆகிவிடும் என்று கவலைப்பட தேவையில்லை.

311
Compact Power Banks

பல்வேறு அளவுகள் மற்றும் திறன்களில் பவர் பேங்க்குகளை வாங்கலாம். பல பவர் பேங்க்குகள் அளவில் சிறியவையாகவும் மெலிதாகவும் இருப்பதால் பயணங்களின்போது எடுத்துச் செல்வதும் ஈசியாக இருக்கும்.

411
Fast Charging Power Banks

சார்ஜிங் தேவைகளுக்கு ஏற்ப எவ்வளவு மில்லியம்பியர் (mAh) திறன் கொண்ட பவர் பேங்க் தேவை என்று முடிவுசெய்யலாம். பெரும்பாலான பவர் பேங்க் பல USB போர்ட்களைக் கொண்டிருக்கும்.

511
Power Bank Use

இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதியும் கிடைக்கிறது. இப்போது சந்தையில் கேஜெட் பிரியர்கள் விரும்பும் டாப் பவர் பேங்க்குகள் சிலவற்றை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

611
Anker 10000 mAh PD Power Bank

Anker 10000 mAh PD Power Bank, PowerCore (சீரிஸ் 3), ஃபாஸ்ட் சார்ஜிங் PowerIQ (PIQ) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. பயணத்தின்போது ஈசியாக எடுத்துச் செல்லும் வகையில் மெலிதான வடிவமைப்புடன் இருக்கிறது. USB-C உள்ளீடு மற்றும் USB-A மற்றும் USB-C வெளியீடு போர்ட்கள் உள்ளன. இரண்டு கேஜெட்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யலாம். இது 10000mAh திறன் கொண்டது. இதன் பவர் டெலிவரி அம்சம் சார்ஜிங் வேகத்தை அதிகரிக்கிறது.

711
Ambrane 20000mAh Power Bank

Ambrane இன் 20000mAh பவர் பேங்க், 20,000mAh திறனுடன் 20W விரைவான சார்ஜிங் அம்சத்தைப் பெற்றுள்ளது. இதில் மூன்று அவுட்புட் போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகிய இரண்டிற்கும் Type C PD வழங்கபட்டுள்ளது. இது விரைவான சார்ஜிங் ஆதவுடன் கொண்டது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு மொபைல்கள் மட்டுமின்றி iOS சாதனங்களையும் சார்ஜ் செய்யலாம். இதில் உள்ள லித்தியம் பாலிமர் பேட்டரி பல அடுக்கு பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

811
URBN 20000 mAh Power Bank

URBN 20000 mAh லித்தியம் பாலிமர் பவர் பேங்க் அல்ட்ரா-காம்பாக்ட் வடிவமைப்பைக் உள்ளது. 22.5W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் மின்னல் வேகத்தில் சார்ஜ் செய்யலாம். விரைவான சார்ஜிங் மற்றும் சிறந்த பவர் டெலிவரி இரண்டையும் உறுதி செய்கிறது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இந்த பவர் பேங்க் உள்ளீடு மற்றும் வெளியீட்டுக்கு Type-C போர்ட் இருக்கிறது.

911
MI 10000mAh Power Bank Pocket Pro

MI 10000mAh பவர் பேங்க் பாக்கெட் ப்ரோ சக்திவாய்ந்த செயல்திறனுடன் நேர்த்தியான வடிவமைப்பை ஒருங்கிணைத்துள்ளது. 22.5W வேகமான சார்ஜிங், உள்ளீட்டுக்கு 2 போர்ட்கள் (மைக்ரோ-யூஎஸ்பி மற்றும் டைப் சி), வெளியீட்டுக்கு 3 போர்ட்கள் உள்ளன. இதன் மூலம் பலவகை கேஜெட்களை சார்ஜ் செய்யும் வசதி கிடைக்கிறது. ஸ்டைலிஷ் பிளாக் ஃபினிஷ் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுக்கிறது.

1011
Amazon Basics 10000mAh Power Bank

Amazon Basics 10000mAh 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்க் கறுப்பு நிறத்தில் கச்சிதமான உலோகக் கட்டமைப்புடன் வருகிறது. டிரிபிள் அவுட்புட் போர்ட், டூயல் இன்புட் போர்ட்களுடன் பலவித சாதனங்களுக்கும் பொருந்தக்கூடிய வசதியைக் கொடுக்கிறது. லித்தியம் பாலிமர் பேட்டரி சிறப்பான சார்ஜிங்கை வழங்குகிறது. குறைந்த விலையில் நம்பகமான பவர் பேங்க் வாங்க விரும்புவோருக்கு இது சரியான தேர்வாக இருக்கலாம்.

 

1111
Portronics Luxcell 10K Power Bank

Portronics Luxcell 10K நேர்த்தியான மற்றும் சக்திவாய்ந்த 10000mAh பவர் பேங்க் ஆகும். 22.5W சார்ஜிங் வேகம் கொண்ட இதில் LED நோட்டிஃபிகேஷன் லைட்டுகளும் உள்ளன. வெளியீடுக்கு Mach USB-A, Type-C PD போர்ட்கள், உள்ளீடுக்கு Type C போர்ட்கள் கொண்டது. டார்க் கிரே கலரில் வசதியான wakeup பட்டன் உள்ளது.

click me!

Recommended Stories