50MP கேமரா + 5260mAh பேட்டரி.. ரூ.12,000 விலையில் 256GB ஸ்டோரேஜ்.. எந்த மொபைல்?

Published : Feb 14, 2026, 12:17 PM IST

ஹானர் தனது புதிய பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனான ஹானர் எக்ஸ்6டி 5ஜி-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 50MP கேமராவுடன் வருகிறது. இதன் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை காணலாம்.

PREV
14
ஹானர் எக்ஸ்6டி 5ஜி மொபைல்

ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், ஹானர் தனது புதிய ஹானர் எக்ஸ்6டி 5ஜி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் பிரிவில் இருந்தாலும், அதிக சேமிப்பு மற்றும் நவீன அம்சங்களுடன் இந்த மொபைல் வெளியாகியுள்ளது.

24
பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்

இந்த மொபைல் 6.75 அங்குல HD+ LCD திரையுடன் வருகிறது. வேகமான செயல்திறனை வழங்க 6nm அடிப்படையிலான MediaTek Dimensity 6300 செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது. தினசரி பயன்பாடு மற்றும் சாதாரண கேமிங் தேவைகளுக்கு இது போதுமான செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.

34
256ஜிபி ஸ்டோரேஜ் போன்

4GB RAM மற்றும் 256GB உள் சேமிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு சேமிப்பு வசதி இந்த விலை வரம்பில் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. Android 15 அடிப்படையிலான MagicOS 9 மூலம் இயங்கும் இந்த மொபைல், பயனர்களுக்கு புதுப்பித்த அனுபவத்தை வழங்கும். புகைப்பட விரும்பிகளுக்காக 50MP பிரதான பின்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது.

44
ஹானர் எக்ஸ்6டி மொபைல் விலை

5260mAh திறன் கொண்ட பேட்டரி நீண்ட நேர பயன்பாட்டை உறுதி செய்கிறது. UAE-யில் AED 509 (சுமார் ரூ.12,600) விலையில் அறிமுகமான இந்த மொபைல், இந்திய வெளியீடு குறித்து இன்னும் அறிவிப்பு இல்லை. இருப்பினும், குறைந்த விலையில் 5G அனுபவம் தரும் மாடலாக இது கவனம் ஈர்த்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories