பட்ஜெட் வேட்டை! 5500mAh பேட்டரி, 32MP செல்ஃபி கேமராவுடன் Motorola G96 5G வெறும் ₹12,000-க்கு கிடைக்குது!

Published : Oct 13, 2025, 07:12 PM IST

Motorola G96 5G மோட்டோரோலா G96 5G போனை பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் ₹12,000 என்ற குறைந்த விலையில் வாங்குவது எப்படி? 5500mAh பேட்டரி, 32MP கேமரா சிறப்பம்சங்கள்.

PREV
14
பிளிப்கார்ட் தீபாவளி அதிரடி சலுகை!

ஃப்ளிப்கார்ட் தளத்தில் தற்போது "பிக் பில்லியன் டேஸ் தீபாவளி விற்பனை" கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, நடுத்தர பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடியான தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. நீங்கள் சுமார் ₹15,000 பட்ஜெட்டில் ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால், கடந்த மாதம் அறிமுகமான Motorola G96 5G மாடலை நிச்சயம் பரிசீலிக்கலாம்.

24
மோட்டோ G96 5G-யின் பிரம்மாண்ட அம்சங்கள்

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ G96 5G, அதன் முன்னோடி மாடலான G85-க்கு மாற்றாக வந்துள்ளது. இது மேம்படுத்தப்பட்ட ஹார்டுவேர் மற்றும் கேமரா அம்சங்களுடன் வருகிறது. குறிப்பாக, இதில் 5,500mAh திறன் கொண்ட பேட்டரி, தெளிவான 32MP செல்ஃபி கேமரா, மற்றும் 256GB வரை சேமிப்பக வசதி போன்ற பலமான அம்சங்கள் உள்ளன. இதனால், நாள் முழுவதும் பயன்பாட்டிற்கு கவலையில்லை.

34
ஆரம்ப விலையே ₹20,999... இவ்வளவு குறைவா?

மோட்டோரோலா G96 போன் 8GB RAM + 128GB மற்றும் 8GB RAM + 256GB என இரண்டு வகைகளில் விற்பனைக்கு உள்ளது. இதன் உண்மையான ஆரம்ப விலை ₹20,999 ஆகவும், டாப் வேரியண்டின் விலை ₹22,999 ஆகவும் உள்ளது. அஷ்லெய் ப்ளூ, ட்ரெஸ்டன் ப்ளூ, ஆர்கிட், மற்றும் கிரீன் ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கிறது. ஆனால், தீபாவளி விற்பனை காரணமாக, பிளிப்கார்ட்டில் இதன் ஆரம்ப விலை ₹15,999 என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது, ₹5,000 நேரடி தள்ளுபடி!

44
₹12,000-க்கு போனை வாங்குவது எப்படி? எக்ஸ்சேஞ்ச் ரகசியம்!

சலுகை விலை ₹15,999-ல் நிற்பதில்லை. நீங்கள் SBI வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால், கூடுதலாக ₹1,000 உடனடித் தள்ளுபடி கிடைக்கும். இதனால் விலை ₹14,999 ஆக குறையும். இதைத் தவிர, உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் விலையை மேலும் குறைக்கலாம். உங்கள் பழைய ஃபோனுக்கு ₹3,000 மதிப்பு கிடைத்தால், மோட்டோ G96 5G-ஐ வெறும் ₹12,000-க்கு வாங்க முடியும். பழைய போனின் நிலையைப் பொறுத்தே அதன் முழு எக்ஸ்சேஞ்ச் மதிப்பு தீர்மானிக்கப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories